மேலும் அறிய

JanaNayagan : ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்குமா..நீதிமன்ற விசாரணை நிலவரம் இதோ

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது

தலைமை நீதிபதி மகேந்திர மோகன் ஶ்ரீவஸ்தவா மற்றும் ஜி அருள்மோகன் ஆகியோரது அமர்வின் முன் சென்சார் போர்ட் தரப்பில் வழக்கு பதிவு செய்த கூடுதல் சொலிசிட்டர் ஏ.ஆர்.ஏ சுந்தரேசன் வாதத்தை தொடங்கிவைத்தார்.

ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை செய்வது குறித்தான சென்சார் வாரியத்தின் முடிவிற்கு எதிராக பட தயாரிப்பு நிறுவனம்  மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை அனுகியது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பிடி ஆஷா ஜனநாயகன் படத்திற்கு u/a சான்றிதழ் வழங்க கோரி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து சென்சார் வாரியம் மேல்முறையீடு செய்தது . அதே நாள் மாலை தலைமை நீதிபதி மகேந்திர மோகன் ஶ்ரீவஸ்தவா மற்றும் ஜி அருள்மோகன் ஆகியோர் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்தனர். இந்த அமர்வில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனிடையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து படக்குழு உச்ச நீதிமன்றத்தை அனுகியது. ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க மறுத்ததால் இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. 

சென்சார் போர்டு வாதம் 

ஜனநாயகன் படத்தை பார்த்த தணிக்கை குழு பார்த்து படத்தில் 14 கட்களை பரிந்துரை செய்யவிருந்தது. 14 கட்களை செய்து படக்குழு படத்தை சமர்பிப்பதற்கு முன்பாக படத்தின் மீது புகார் வந்ததால் தணிக்கை சான்றிதழ் நிறுத்திவைக்கப்பட்டது. படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது குறித்து பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஜனவரி 5 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது. மறு ஆய்விற்கு அனுப்புவதில் எந்த தாமதமும் ஏற்படவில்லை அதற்குள் படக்குழு உயர் நீதிமன்றத்தை அனுகியது. மேலும் படக்குழு மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. ஜனநாயகன் படக்குழுவின் மனுவை விசாரித்த தனி நீதிபதி தணிக்கை குழுவிற்கு பதிலளிக்க போதுமான அவகாசம் கொடுக்காமல் தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்." என சென்சார் போர்டு சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஏ ஆர் ஏ சுந்தரேசன் வாதத்தை முன்வைத்தார். 

மண்டல அதிகாரிகள் படத்தை பார்க்கவில்லை

சென்சார் போர்டில் யார் படத்தைப் பார்த்தார்கள் , சட்டபடி படத்தை பார்த்து ஆலோசனை வழங்க யாருக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

" மண்டல அதிகாரிகள் படத்தைப் பார்க்கவில்லை தணிக்கை குழுவினர் தான் படத்தை பார்த்தனர் . மண்டல அலுவலகத்தில் உள்ள ஆய்வுக் குழுவின் முடிவுகள் சென்சார் போர்டை கட்டுப்படுத்தாது. மண்டல சென்சார் போர்டு தரப்பில் புகார் வந்தால் மும்பை மறு ஆய்வு குழுவிற்கு அனுப்பப்படும் படத்தைப் பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது அந்த குழு தான் படத்தைப் பார்த்தது.  ஜனநாயகன் பட விவகாரத்தில் விதிகளின் படிதான் சென்சார் போர்டு செயல்பட்டுள்ளது. ஒரு படம் 72 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் அது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் தணிக்கை வாரியத்தின் தலைவருக்கே உள்ளது. ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது குறித்து இதுவரை தணிக்கை வாரிய தலைவர் எந்த முடிவும் எடுக்கவில்லை ' என தணிக்கை வாரியம் சார்பாக கூறப்பட்டது

விசாரணை மதியம் 2 : 15 க்கு தொடரும் 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Embed widget