Jaibhim | திருடனுங்க இல்லாத சாதி இருக்கா.. பெரிய திருடனுங்க இருக்காங்க.. பட்டாசாய் தெறிக்கும் ஜெய்பீம் வசனங்கள்
"தப்பு பண்றவங்களுக்கு பதவி, பணம், சாதின்னு நெறைய இருக்கு சார். பாதிக்கப்பட்டவங்களுக்கு நாமதான இருக்கோம்" என வழக்கறிஞர்கள் போராட்டக்காரர்களின் முக்கியத்துவத்தை அழுத்தமாகவே பதியம் போட்டுள்ளார்.
Amazon Prime ஓடிடி தளத்தில் வெளியாக பட்டையை கிளப்பும் படம் ‘ஜெய் பீம்’ . தற்போது சமூக வலைத்தளங்களில் ‘டாக் ஆஃப் தி டவுனாக’ மாறியுள்ளது. படத்தில் சூர்யா அத்தனை எதார்த்தமாக , படத்தின் தேவை மற்றும் அதில் தனக்கான கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்துள்ளார். ஒவ்வொரு சீனிலும் சூர்யா பேசும் அழுத்தமான வசனங்கள் பார்ப்பவருக்கும் மெய் சிலிர்ப்பை உண்டாக்க தவறவில்லை. அப்படியான சில வசனங்களை கீழே ஹைலைட் செய்துள்ளோம்..
படத்தின் காட்சி ஒன்றில் போலீஸ் அதிகாரி நடித்துள்ள பிரகாஷ்ராஜ் சூர்யாவிடம் "அதென்ன சார் போலீஸ்னா உங்களுக்கு அப்டி ஒரு வெறுப்பு?" என கேட்கிறார். அதற்கு வழக்கறிஞரான சூர்யா "வெறுப்பு இல்ல சார், இந்த சமூகத்தின் மீதான பொறுப்பும் அக்கறையும்." என பதிலளிக்கிறார். உடனே சூர்யா "அப்டியா! சரி, அப்ப நாளைக்கு ஒரு முற்றுகை போராட்டம் இருக்கு வந்துருங்க." என போராட்டம் என்பது வன்முறை அல்ல அது சமூகத்தின் மீதான அக்கறை என மறைமுகமாக சாடியுள்ளார். அதுமட்டுமல்ல போராட்டம் எனக்கு ஒரு ஆயுதம் என குறிப்பிட்டிருப்பார். அதில் "ஒரு இன்னசென்ட் ட்ரைபிள் உமனுக்கு ஜெஸ்டிஸ் கிடைக்கணும்னு போராடுறேன்... கோர்ட்ல நீதி கெடைக்கலைன்னா ரோட்ல எறங்கி போராடுவேன். போராடுறதுலாம் எனக்கொரு வெப்பன் தட்ஸ் ஆல்." என்பதை அழுத்தமாக பதிய வைத்துள்ளார் இயக்குநர்.
The fight for what is right has begun 🔥
— amazon prime video IN (@PrimeVideoIN) November 1, 2021
Watch #JaiBhimOnPrime, now: https://t.co/nGaJMrNvaE @Suriya_offl #Jyotika @tjgnan @prakashraaj @RSeanRoldan @srkathiir @KKadhirr_artdir @philoedit @rajisha_vijayan #Manikandan @jose_lijomol @PoornimaRamasw1 @kabilanchelliah pic.twitter.com/tkEcYVszTF
அதே போல "எந்த ஆதாரமும் இல்லாம நாம கேஸப் போடுறது, வெறும் மூனு போலீச எதுத்து இல்ல... இந்த அரசாங்கத்த எதுத்து." மற்றும் "இந்த சாதியில இருக்கவங்க, நெறையப் பேரு திருட்டு கேஸூல கன்வெர்ட் ஆகுறது ரொம்ப சகஜம் சார்" போன்ற வசனங்கள் பலரையும் கவர்ந்துள்ளது. தாழ்த்தப்பட்ட சாதியினர் என குறிப்பிடும் மக்கள் மீதான பார்வையை மாற்றும் விதமாக "திருடங்க இல்லாத சாதி இருக்கா நட்ராஜ்? உங்க சாதி, என் சாதின்னு எல்லா சாதியிலயும் பெரிய பெரிய திருடங்க இருக்காங்க." சாடியுள்ளார்.
Hello all checkout @PrimeVideoIN now!!
— Suriya Sivakumar (@Suriya_offl) November 1, 2021
Watch #JaiBhimOnPrime, Nov. 2 pic.twitter.com/p3vAV8QKcL
மேலும்"தப்பு பண்றவங்களுக்கு பதவி, பணம், சாதின்னு நெறைய இருக்கு சார். பாதிக்கப்பட்டவங்களுக்கு நாமதான இருக்கோம்" என வழக்கறிஞர்கள் போராட்டக்காரர்களின் முக்கியத்துவத்தை அழுத்தமாகவே பதியம் போட்டுள்ளார்.அதே போல "இருக்குற எடத்துக்கு பட்டா கெடையாது, ரேசன் கார்டு கெடையாது, ஓட்டர் லிஸ்ட்ல பேரே கெடையாது..அது இவங்க தப்பா?... சுந்தரம் கிடைச்சு 50 வருசம் ஆகப் போகுது. ஆனா இவங்க கைல ஒரு அட்ரஸ் ஃப்ரூப்கூட இல்ல." என அரசாங்கத்தையே நேரடியாக கேள்வி கேட்பது போன்ற சீன் மாஸ்."நீதிக்கு ஆதரவான வார்த்தைகளை விட, அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மெளனம் ஆபத்தானது." போன்ற வசனங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.