Ilayaraja Live Concert: இன்னிசையில் நனைய தயாரா..? சென்னையில் இளையாராஜாவின் இசைக்கச்சேரி.. எப்போது தெரியுமா?
பிரபல இசையமைப்பாளாரான இளையராஜா சென்னையில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்த இருக்கிறார்.
2021 ஆம் ஆண்டு ‘சிவரஞ்சினியும் இன்னும் சிலப் பெண்களும்’ . ‘கமனம்’ (தெலுங்கு) ஆகிய இருபடங்கள் இளையராஜாவின் இசையில் வெளியாகின. ஆனால் இந்த ஆண்டு இளையராஜாவின் இசையில் “ கடைசி விவசாயி, விடுதலை, துப்பறிவாளன் 2, தமிழரசன் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகியுள்ளன. ஒரு பக்கம் . படங்களில் கவனம் செலுத்தி வரும் இளையராஜா, மற்றொரு பக்கம் இசை நிகழ்ச்சிகளை நடத்துவது, ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெறுவது உள்ளிட்டவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
View this post on Instagram
இசை நிகழ்ச்சிகளில் இவரது பாடல்கள் பாடல்கள் எப்படி ரசிக்கப்படுகிறதோ, அதே போல அந்தப் பாடலை அவர் உருவாக்கிய விதம் குறித்து பகிர்வதும் மக்கள் மத்தியில் ரசிக்கப்படுகிறது. இந்த நிலையில் இளையராஜா மீண்டும் ஒரு இசைக் கச்சேரியை நடத்த இருக்கிறார். இந்தக் கச்சேரி வருகிற மார்ச் மாதம் நடக்க இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். இது குறித்தான பதிவை இளையராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் இந்தியாவின் இசைக்குயில் என்று அழைப்பட்ட லதா மங்கேஷ்வர் மறைந்தார். அவரது இறப்பு என்பது மிகப் பெரிய இழப்பு என்று பேசி வீடியோ வெளியிட்ட இளையராஜா, “ இந்திய திரைப்பட இசையுலக வரலாற்றில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னுடைய தெய்வீக காந்தர்வ குரலால், உலக மக்களையெல்லாம் மயக்கி தன் வசத்தில் வைத்திருந்த லதா மங்கேஷ்கரின் மறைவு, ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வேதனையை எப்படி போக்குவேன் என்று தெரியவில்லை. அவருடையை இழப்பு இசையுலகிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்த தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசியிருந்தார்.
Heartbroken, but blessed to have known her & for having worked with her.. loved this incredible voice & soul... Lataji holds a place in our hearts that is irreplaceable…. That's how profoundly she has impacted our lives with her voice. pic.twitter.com/HEAWKaUTZs
— Ilaiyaraaja (@ilaiyaraaja) February 6, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்