மேலும் அறிய

‛வள்ளுவர்-வாசுகி தெரியாமல் திட்டுவாங்கினேன்...’ வாலியை கோபப்படுத்திய தேவாவின் ஆரம்ப காலம்!

‛அடப்பாவி... உனக்கே வள்ளுவன் வாசுகி தெரியாதா....’ என கோபத்தின் உச்சிக்கு போய்விட்டார் வாலி.

வாலிப கவிஞர் வாலி பற்றி பேசாதவர்கள் இல்லை. இசையமைப்பாளர் தேவா, தனது வாலியுடனான அனுபவம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் பகிர்ந்திருந்த தகவல்கள், தற்போது வீடியோக வைரல் ஆகி வருகிறது. அந்த பேட்டி இதோ அப்படியே...

‛வள்ளுவர்-வாசுகி தெரியாமல் திட்டுவாங்கினேன்...’ வாலியை கோபப்படுத்திய தேவாவின் ஆரம்ப காலம்!

‛‛வயது ஏறினால் வார்த்தை தடுமாறும் என்பார்கள். வயது ஏறினாலும் வார்த்தை மெருகேறும் என்பதற்கு வாலி அண்ணன் உதாரணம். ரொம்ப வருசத்திற்கு அப்புறம் ஒரு படத்திற்கு வாய்ப்பு கிடைக்கிறது. இரண்டு தயாரிப்பாளர்கள். ஒரு தயாரிப்பாளருக்கு என்னை பிடிக்கிது. இன்னொரு தயாரிப்பாளருக்கு என்னை பிடிக்கவில்லை. தத்தகாரத்தில் நான் பாடும் போது என்னை எப்படியாவது என்னை தூக்கலாம் என அந்த பிடிக்காத தயாரிப்பாளர் எவ்வளவோ முயற்சிக்கிறார். நாளை வாலி வருவார், அப்புறம் நீ காலி என அந்த தயாரிப்பாளர் சொன்னார். மறுநாள் வாலி அண்ணன் வந்தார். நான் ட்யூன் போட்டேன். ‛ஆரம்பம் நல்லாருக்கு... வயலெல்லாம் நெல்லா இருக்கு...’ என அவர் எழுதியதும், தயாரிப்பாளர் முகம் மாறிவிட்டது. வயலெல்லாம் நெல்லா இருக்கு என எழுதி என் வீட்டு அரிசிக்கு உத்தரவாதம் தந்தவர் வாலி அண்ணேன். 

ஒரு புது இயக்குனர் ஒருவருக்கு இசையமைக்கும் வாய்ப்பு. அவர் புதுமுக இயக்குனர். அவருடன் எக்கச்சக்க உதவி இயக்குனர்கள் வந்தார்கள். வாலி அண்ணன் தான் பாட்டு எழுதியிருந்தார். இயக்குனரிடம் அந்த பாடல் தரப்பட்டது. அவர் படித்தார். அவருக்கு பின்னால், அவரது உதவி இயக்குனர்கள் ஒவ்வொருவராக படித்தார்கள். அதை பார்த்து வாலி அண்ணனுக்கு கடும் கோபம். ‛யோவ்... நான் என்ன என் வீட்டு பத்திரமா கொடுத்திருக்கேன். பாட்டு தானய்யா கொடுத்திருக்கேன்..’ என்று கோபமாக கேட்டார். அதற்கு தயங்கிக் கொண்டே அந்த இயக்குனர் கூறினார். ‛இல்லை சார்... நம்ம ஹீரோ பேரு சிவா... ஹீரோயின் பேரு பாக்கிய லட்சுமி... ஆனால் நீங்க பாட்டில் வள்ளுவன், வாசுகினு... யாரு பேரையோ எழுதியிருக்கீங்க...’ என்றார். 

‛வள்ளுவர்-வாசுகி தெரியாமல் திட்டுவாங்கினேன்...’ வாலியை கோபப்படுத்திய தேவாவின் ஆரம்ப காலம்!

அவ்வளவு தான், வாலி அண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது. ‛யோவ் தேவா... வள்ளுவன், வாசுகி யாருன்னு கூட தெரியாத ஆளுங்க கூட எப்படியா வேலை பார்க்குறனு... கோபப்பட்டார்’ வாலியண்ணா. நான் என்ன பண்ணிட்டேன், ‛ஆமாண்ணே... அவங்களுக்கு தெரியாதுண்ணே... அவங்க வெளியூர் அண்ணா...’ என்று கூறி, நான் மாட்டிக்கொண்டேன். ‛அடப்பாவி... உனக்கே வள்ளுவன் வாசுகி தெரியாதா....’ என கோபத்தின் உச்சிக்கு போய்விட்டார் வாலி. அவர் கோபம், வெளியில் சென்று எச்சில் துப்பிவிட்டு, அது காயம் வரையில் தான். அதன் பின் ரிலாக்ஸ் ஆகிவிடுவார். 

வாலி சார் நிறைய சென்டிமெண்ட் பார்ப்பார். எந்த பாடலாக இருந்தாலும் சுபமாக முடிப்பார். கவிஞர்களின் கர்நாடக சங்கீதம் தெரிந்த ஒரே கவிஞர் வாலி தான். பல நேரங்களில் நானே அவரிடம் ராகங்களை கேட்டு தெரிந்திருக்கிறேன். அவ்வை சண்முகியில் அவர் வரும் முன், வேலை பற்றி சலித்துக் கொண்டு நாங்களாக ஒரு வரி போட்டு வைத்திருந்தோம். அவர் வந்தார்... ‛ஏன்ய்யா... எல்லாரும் வேலை பார்க்கத்தானய்யா இருக்கோம். ஜாலியா வேலை பாருங்கய்யா... என, ஆம்பளைக்கும் வேலை, பொம்பளைக்கும் வேலை...’ என மாற்றியவர் வாலி. வாலி எப்போதும் பெருமையானவர்,’’ என தேவா அந்த மேடையில் வாலி பற்றி மனம் திறந்து வாழ்த்தினார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Holiday: தொடரும் கனமழை - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளிக்கு இன்றும் விடுமுறை!
School Holiday: தொடரும் கனமழை - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளிக்கு இன்றும் விடுமுறை!
காதலித்த பெண்ணை கரம் பிடித்த கையோடு காவல் நிலையம் சென்ற தம்பதி! கணவனை தூக்கிய போலீஸ்! புதுப்பொண்ணு ஷாக்!
காதலித்த பெண்ணை கரம் பிடித்த கையோடு காவல் நிலையம் சென்ற தம்பதி! கணவனை தூக்கிய போலீஸ்! புதுப்பொண்ணு ஷாக்!
Rasipalan: மீனத்துக்கு பாசம்..மேஷத்துக்கு நம்பிக்கை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மீனத்துக்கு பாசம்..மேஷத்துக்கு நம்பிக்கை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
கை, கால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவ்விற்கு KPY பாலா செய்த செம உதவி.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!
கை, கால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவ்விற்கு KPY பாலா செய்த செம உதவி.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Holiday: தொடரும் கனமழை - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளிக்கு இன்றும் விடுமுறை!
School Holiday: தொடரும் கனமழை - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளிக்கு இன்றும் விடுமுறை!
காதலித்த பெண்ணை கரம் பிடித்த கையோடு காவல் நிலையம் சென்ற தம்பதி! கணவனை தூக்கிய போலீஸ்! புதுப்பொண்ணு ஷாக்!
காதலித்த பெண்ணை கரம் பிடித்த கையோடு காவல் நிலையம் சென்ற தம்பதி! கணவனை தூக்கிய போலீஸ்! புதுப்பொண்ணு ஷாக்!
Rasipalan: மீனத்துக்கு பாசம்..மேஷத்துக்கு நம்பிக்கை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மீனத்துக்கு பாசம்..மேஷத்துக்கு நம்பிக்கை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
கை, கால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவ்விற்கு KPY பாலா செய்த செம உதவி.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!
கை, கால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவ்விற்கு KPY பாலா செய்த செம உதவி.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!
கேரளா, ஆந்திராவில் இருக்கு; தமிழ்நாட்டுக்கு என்ன? தமிழக அரசு தலைகுனிய வேண்டும்: ஹரி நாடார்
கேரளா, ஆந்திராவில் இருக்கு; தமிழ்நாட்டுக்கு என்ன? தமிழக அரசு தலைகுனிய வேண்டும்: ஹரி நாடார்
விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சேர்மனுக்கு சிக்கல்! கவுன்சிலர்கள் கும்பலாக எடுத்த அதிரடி முடிவு!
விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சேர்மனுக்கு சிக்கல்! கவுன்சிலர்கள் கும்பலாக எடுத்த அதிரடி முடிவு!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
Sam Pitroda:இந்தியர் குறித்து சர்ச்சையான கருத்து: ராஜினாமா செய்த காங்கிரஸ் அயலக தலைவர் சாம் மீண்டும் நியமனம்!
Sam Pitroda:இந்தியர் குறித்து சர்ச்சையான கருத்து: ராஜினாமா செய்த காங்கிரஸ் அயலக தலைவர் சாம் மீண்டும் நியமனம்!
Embed widget