என்ன பத்தி தெரிஞ்சுகிட்டு பேசுங்க.. நீங்க அவ்ளோ பெரிய ஆளா? பயில்வான் ரங்கநாதனிடம் எகிறிய வாட்டர்மெலன் ஸ்டார்
தன்னைப் பற்றி தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று இன்ஸ்டாகிராம் பிரபலம் டாக்டர் திவாகர் நிருபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இன்ஸ்டாகிராம் மூலமாக ஏராளமானோர் சமீபகாலமாக பிரபலம் அடைந்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் சமீபத்தில் மிகவும் பிரபலமானவர் டாக்டர் திவாகர். இவருக்கு வாட்டர்மெலன் ஸ்டார் என்று அவருக்கு அவரே பட்டம் சூட்டிக்கொண்டார்.
பயில்வான் ரங்கநாதனுடன் வாக்குவாதம்:
இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. தற்போது அவர் என் காதலே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவருக்கும், நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
திவாகர் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது அவரிடம் பயில்வான் ரங்கநாதன் கேள்வி கேட்டார். அப்போது, நான் பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் இடையில் வருவது சபை நாகரிகமா? நான் பேசி முடித்த பிறகு கேள்வி கேளுங்கள் சார். பேசி முடித்த பிறகு வாருங்கள் சார். அதுதான் சபை நாகரிகம். அதுதான் சார் சீனியர் நடிகருக்கான மரியாதை.
ஆபாசமா பேசாதீங்க:
உங்களை விட நான் ஒரு சின்ன பையன், ஒரு குழந்தை. இவ்ளோ பேரு கேள்வி கேட்டுகிட்டு இருக்காங்க. இடையில குறுக்கீடு செய்யலாமா? சொல்லுங்க. புதுமுகங்களுக்கு நன்றி கொடுங்கனு சின்னக்கருத்து சொல்றேன். யாரையும் தப்பா சொல்லல.
மிஷ்கின் சாரை நான் தவறா பேசல. சார் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுங்க. இன்ஸ்டாகிராம்ல நடிக்குறவங்களை பத்தி யாரும் ஆபாசமா பேச வேண்டாம்னு பொதுவான கருத்தை சொன்னேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீங்க பெரிய ஆளா?
அப்போது, பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு, இன்ஸ்டாகிராமை கடந்து நான் 5 படங்கள் நடித்துள்ளேன். முதலில் என்னைப் பற்றி தெரிந்துகொண்டு பேசுங்கள். என்னை கேள்வி கேட்குறீங்களே நீங்க அவ்ளோ பெரிய ஆளா? சின்னப்புள்ளத்தனமா கேள்வி கேட்கக்கூடாது. சின்ன வயசுல இருந்தே நான் டிராமா போட்டிகளில் முதல் பரிசு. என் சான்றிதழ்களை சோசியல் மீடியாவுல பதிவிட்டுள்ளார். இந்த மாதிரி கேள்வி கேக்குறது அநாகரிகம். நான் படிச்சது என்ன? என் கல்வி என்ன? இவரை விட நான் பெரிய ஆளுதான்.
நான் படிச்சுருக்கேன். எனக்கு ஒரு லெவல் இருக்கு. என்னை பத்தி பேச இவரு ஒரு ஆளே கிடயாது.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் திவாகர் அதன்பின்பு பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.





















