மேலும் அறிய
Advertisement
உங்களுக்கு பாதுகாப்பான முதலீடு, நிலையான வருமானம் வேணுமா? இதைப் படிங்க!
சமீபத்தில் அஞ்சலக தேசிய சேமிப்பு மாத வருமானக் கணக்கு மற்றும் தபால் அலுவலக MIS கணக்கு போன்ற சிறு சேமிப்பு திட்டங்களுக்கான கட்டணங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பாதுகாப்பான முறையில் சேமிக்க விரும்பினால் அவர்களின் ஒரே சாய்ஸ் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம் தான். இன்று பல சேமிப்பு முறைகள் இருப்பினும் ஆபத்து இல்லாத அதே சமயம் நல்ல வருமானத்தையும் ஈட்டி கொடுப்பது போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் தான்.
அதிக வட்டி :
அதிக வட்டி :
சமீபத்தில் அஞ்சலக தேசிய சேமிப்பு மாத வருமானக் கணக்கு மற்றும் தபால் அலுவலக MIS கணக்கு போன்ற சிறு சேமிப்பு திட்டங்களுக்கான கட்டணங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அதே 6.6 % ஆக இருப்பினும் இது மற்ற வங்கிகளில் அளிக்கப்படும் FD வட்டி விகிதத்தை விடவும் அதிகம் தான்.
நிலையான வருமானம்:
முதலீட்டாளர்கள் இந்த அஞ்சலக தேசிய சேமிப்பு மாத வருமானக் கணக்கு மூலம் முதலீடு செய்யும் போது அதிக அளவிலான வருமானத்தை பெற முடியும். முதலீடு செய்யும் போது இருந்த வட்டி வீகிதத்தின்படி நிலையான வருமானத்தை பெறமுடியும். பிற்காலத்தில் ஏற்படும் வட்டி விகிதத்தின் மாற்றங்கள் குறித்து கவலை பட தேவையில்லை.
தபால் அலுவலக MIS கணக்கு:
தபால் அலுவலக MIS கணக்கு மூலம் முதலீடு செய்ய விருப்பம் உள்ள முதலீட்டாளர்கள் குறைந்த பட்ச தொகையாக ரூ. 1,000 செலுத்த வேண்டும். அதன் பிறகு முதலீடு செய்யும் தொகைகள் ரூ. 1,000ன் மடங்காக அஞ்சலகத்தின் வழிகாட்டுதல்களின்படி இருக்க வேண்டும். இந்த அறிவிப்பு ஏப்ரல் 1, 2020 முதல் அமலில் உள்ளது. ஒரு கணக்கிற்கு அதிகபட்ச முதலீட்டு தொகையாக ரூ.4.5 லட்சமாகவும், ஜாயிண்ட் கணக்கிற்கு ரூ.9 லட்சமாகவும் உள்ளது. ஜாயிண்ட் கணக்கில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் சமமான பங்கு உள்ளது.
மைனர்கள் தபால் அலுவலக MIS கணக்கு வைத்து கொள்ள முடியுமா?
மைனர்கள் சார்பாக அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மூலம் தபால் அலுவலக MIS கணக்கு திறக்கலாம். இருப்பினும் 10 வயதிற்கு மேற்பட்ட மைனர்கள் தங்களின் பெயரிலேயே கணக்கை திறக்கலாம். அதில் இருந்து பெறப்படும் வட்டி தொகையை வைத்து பெற்றோர்கள் குழந்தையின் பள்ளி கட்டணத்தை செலுத்தலாம் அல்லது குழந்தைகளின் நலனுக்கான மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
MIS கணக்கின் மாதாந்திர வட்டி எப்படி கணக்கிடப்படுகிறது?
ஒரு MIS கணக்கு தொடங்கி அதில் ரூ.2 லட்சத்தை டெபாசிட் செய்தால் அதன் தற்போதைய வருடாந்திர வட்டி விகிதத்தின் படி மாதம் ரூ.1,100 பெறுவீர். அதுவே குழந்தையின் பெயரில் டெபாசிட் தொகை ரூ.3.50 லட்சத்தை முதலீடு செய்வதன் மூலம் ரூ.1,925 வட்டியாக பெறமுடியும். அதிகபட்ச தொகையான ரூ.4.5 லட்சத்தை டெபாசிட் செய்வதால் ரூ.2,475 மாத வட்டியாக பெறலாம். ஆனால் டெபாசிட்டருக்கு வட்டியின் மீது வரி விதிக்கப்படும். இந்த தபால் அலுவுலக MIS கணக்கு திறக்கப்படும் நாளில் இருந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு பாஸ் புக் மற்றும் விண்ணப்ப கடித்தை தபால் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் முடித்து கொள்ளலாம்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion