Mahabharata: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மகாபாரதம்...புதிய அறிவிப்பு என்ன தெரியுமா?
டிஸ்னியின் டி 23 எக்ஸ்போ இன்று நடைபெற்றது. அதில் இந்தியன் புராணக்கதை மகாபாரதத்தை சீரிஸாக எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
டிஸ்னியின் டி 23 எக்ஸ்போ இன்று நடைபெற்றது. அதில் இந்தியன் புராணக்கதை மகாபாரதத்தை சீரிஸாக எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அடுத்ததாக டிஸ்னி தயாரிக்க உள்ள மூன்று புதிய சீரிஸ்களின் டைட்டில்கள் வெளியிடப்பட்டது. இந்திய புராண கதையான மகாபாரதமும் இந்த மூன்றில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் குழுமத்தின் தலைவர் கௌரவ் பானர்ஜி பேசுகையில், சில வருடங்களாக இந்தியா புதுமை நிறைந்த ஐடியாக்களின் பவர்ஹவுஸாக இருந்து வருகிறது. மொழி மற்றும் கலாச்சார தடுப்புகளை தகர்த்து எறிந்து அனைத்து நாட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
View this post on Instagram
ஓடிடி வளர்ந்து வரும் இந்த நிலையில், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையாளர்கள் விரும்பும் வண்ணம் இருந்து வருகிறது. விரைவில் மகாபாரதம் மற்றும் காஃபி வித் கரன் சீசன் 8 டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது, என்று அவர் கூறியுள்ளார். மேலும் தயாரிப்பாளர் மது மந்தனா கூறுகையில், இந்திய புராண கதைகள் லட்சக்கணக்கான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
View this post on Instagram
இந்திய புராணக்கதை மகாபாரதம் காலத்தால் பழமையானாலும், இன்றும் வாழ்வியலுக்கேற்ற பல கருத்துக்களை தெரிவித்து வருவதால், அதில் கூறப்படும் ஒவ்வொரு வார்த்தைகளும் எளிதில் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது. டிஸ்னி குழுமம் மகாபாரதத்தை தயாரிப்பதில் பெருமை கொள்கிறது. மேலும் டி20 எக்ஸ்போவில் இந்த செய்தியை தெரிவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.