மேலும் அறிய

Tirupati Laddu: திருப்பதி லட்டு சுவையாவே இல்ல.. பிரபல நடிகை பகீர் புகார்!

திருப்பதியில் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்த லட்டுவில் சமீபகாலமாக சர்ச்சை வெடித்து வருகிறது. நெய்யில் கலப்படம் தொடங்கி தற்போது பிரபல நடிகை லட்டு சுவையாக இல்லை என பதிவிட்டுள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பெறப்பட்ட லட்சு சுவையாக இல்லை என பிரபல தெலுங்கு நடிகை மாதவிலதா தெரிவித்த குற்றச்சாட்டு மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. 

உலகின் இரண்டாவது பணக்கார கடவுளாக அறியப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அலைமோதுகின்றனர். திருப்பதியில் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்த லட்டுவில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக புதிதாத ஆந்திராவில் பொறுப்பேற்ற சந்திரபாபு தலைமையிலான அரசு முந்தைய அரசான ஜெகன் மோகன் ரெட்டி அரசை குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

திருப்பதி ஏழுமலையானை சமய பேதம் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் வணங்கி வருகின்றனர். அப்படி இருக்கும்போது இப்படியான குற்றச்சாட்டு பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்தது. இப்படியான நிலையில் நடிகை மாதவி லதா சமூக வலைத்தளத்தில் திருப்பதி லட்டு தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “திருப்பதி லட்டுவின் சுவை தான் எதிர்பார்த்தது போல் இல்லை. லட்டில் உள்ள நெய்யில் மணமில்லாமல் சர்க்கரை மற்றும் பச்சை கற்பூர வாசனை அதிகமாக உள்ளது. கடந்த டிசம்பரில் தான் சாப்பிட்ட சிறிய லட்டு மிகவும் சுவையாக இருந்தது. ஆனால் இப்போது கிடைத்த லட்டு பிரசாதத்தின் தரம் குறைந்துள்ளது. பக்தர்கள் சிறந்த தரமான பிரசாதத்தைப் பெற வேண்டும் என்று விரும்புவதில் எந்தத் தவறும் இல்லை. ஒரு இந்துவாகவும், சிவனின் பக்தையாகவும், பிரசாதத்தின் தரத்தை கேள்வி கேட்க தனக்கு உரிமை உண்டு என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது. உடனடியான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. அவர்கள் நடிகை மாதவி லதாவை தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து மீண்டும் ஒரு பதிவை மாதவி லதா வெளியிட்டுள்ளார். அதில், “திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. லட்டுகளை வாங்கியது யார்?, எங்கே, எப்போது வாங்கப்பட்டது?, ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் புகாரளிக்காமல் ஏன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டீர்கள்?” என கேள்வியெழுப்பினர். 

ஆனாலும் அதிகாரிகள் தன்னிடம் பணிவுடன் தான் பேசினர். மற்றவர்கள் அனுமதியில்லாமல் என் போனில் ரெக்கார்ட் செய்ய முடியாது என்பதால் செய்யவில்லை எனவும் தெரிவித்திருந்தார். சமூக ஊடகங்கள் என்பது சாதாரண மக்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்க பயன்படுகிறது. ஒவ்வொருவரின் தொலைபேசி எண்களையும் கண்டுபிடித்து புகார் செய்வது சாத்தியமில்லை” எனவும் கூறியுள்ளார். 

மேலும் எனக்கு வந்த லட்டு திருமலையில் தான் பெறப்பட்டது. லட்டின் சுவை அறிந்தவர்களால் என்  வலியை புரிந்துக் கொள்ள முடியும். மாதவி லதாவின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget