(Source: ECI/ABP News/ABP Majha)
India Lockdown: எதிர்ப்பார்ப்புகளை எகிற வைக்கும் ‘இந்தியா லாக்டவுன்’ படத்தின் டீசர்...ரசிகர்கள் வரவேற்பு..!
கொரோனா ஊரடங்கால் சொந்த ஊரை விட்டு வெளியூரில், வெளி மாநிலத்தில் வேலை பார்த்த மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் உணவு, இருப்பிடம் கிடைக்காமல் அவதிப்பட்டதை அனைவருமே கண்கூடாக பார்த்தோம்.
ஸ்வேதா பாசு பிரசாத், பிரதீக் பாப்பர் ஆகியோர் நடிப்பில் வெளியாகவிருக்கும் “இந்தியா லாக்டவுன்” படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று 2020 ஆம் ஆண்டு இந்தியா உட்பட உலக நாடுகளில் கடும் பேரிழப்பை ஏற்படுத்தியது. பொருளாதார இழப்பு ஒரு பக்கம் என்றால், நோய் தொற்றால் மனித உயிர்கள் லட்சக்கணக்கில் பலியானது மறுபக்கம் என இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரழிவாக கொரோனா பரவல் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி மார்ச் மாதத்தில் அதிகரித்த கொரோனாவால் முதலில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
Hindi film #IndiaLockdown will premiere on ZEE5 Premium on December 2nd.#IndiaLockdownTeaser #IndiaLockdown pic.twitter.com/S1Qgda10MJ
— Avnish Mishra (@avnishmishra16) November 9, 2022
அப்போது சொந்த ஊரை விட்டு வெளியூரில், வெளி மாநிலத்தில் வேலை பார்த்த மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் உணவு, இருப்பிடம் கிடைக்காமல் அவதிப்பட்டதை அனைவருமே கண்கூடாக பார்த்தோம். இதில் மத்திய, மாநில அரசுகளின் முயற்சி, தனி நபர்களின் உதவிகள் என கிட்டதட்ட 2 ஆண்டுகளில் போடப்பட்ட ஊரடங்கு நாட்களை நாம் கையாண்டது இப்போது நினைத்தாலும் பிரமிப்பாகவே உள்ளது.
View this post on Instagram
இந்நிலையில் இந்த கசப்பான சம்பவத்தை கொண்டு “இந்தியா லாக்டவுன்” என்ற படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஸ்வேதா பாசு பிரசாத், பிரதீக் பாப்பர், சாய் தம்ஹங்கர், அஹானா குமார் மற்றும் பிரகாஷ் பெலவாடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்திய அரசாங்கம் முதன்முதலில் அறிவித்த 21 நாட்கள் கொரோனா ஊரடங்கால் 4 நபர்களின் வாழ்க்கை ஸ்தம்பித்த கதையை இப்படத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மதுர் பண்டார்கரின் இரண்டாவது OTT திரைப்படமாகும். இந்தியா லாக்டவுன் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ZEE5 ஓடிடி தளத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.