மேலும் அறிய
Advertisement
Impressive Herbal Tea : எப்போவுமே சோர்வா இருக்கீங்களா? இந்த மூலிகை டீ வகைகளால் உடனடி எனர்ஜி கேரண்ட்டி..
மழைக்காலங்களில் நோய் தொற்று பரவல் அதிகமாக இருக்கும். ஆரோக்கியமான தேநீர் வகைகள் சிலவற்றை பற்றி பார்க்கலாம். ஆனால் அதற்கு பிறகு நீங்கள் வழக்கமான டீயை தொடவே மாட்டீங்க.
அடிக்கடி தேநீர் குடிக்கும் பழக்கம் இருப்பவரா நீங்கள். அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். மழைக்காலம் தொடங்க போகிறது. வீட்டிலேயே இருந்து சூடான தேநீர் குடிக்க ஆசைப்படுபவர்களுக்கு ஒரு நற்செய்தி. வழக்கமான தேநீர் குடிப்பதை விட சுவையான மற்றும் ஆரோக்கியமான தேநீர் வகைகள் சிலவற்றை பற்றி பார்க்கலாம். ஆனால் அதற்கு பிறகு நீங்கள் வழக்கமான டீயை தொடவே மாட்டீங்க.
ரோஸ்மேரி தேநீர்:
இந்த மழைக்கால பருவத்தில் நோய் தொற்று பரவல் அதிகமாக இருக்கும். அதற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை இந்த தேநீர் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தேவையான பொருட்கள்:
2 கப் தண்ணீர், 1 இன்ச் இஞ்சி, 6 துளசி இலைகள், 1 இன்ச் லெமன்கிராஸ், 1 ஸ்பூன் ஓமம், ரோஸ்மேரி 1 கிளை, 1 பிரிஞ்சி இலை, சிறிது சீந்தல் இலை, 1/2 இன்ச் பட்டை, 1 ஸ்பூன் ரோஜா இதழ்கள். அனைத்து பொருட்களையும் நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து பிறகு ஒரு நிமிடம் முடி போட்டு மூடி வைத்து விட்டு பிறகு சுடராக பரிமாறவும்.

டிடாக்ஸ் மூலிகை தேநீர்:
எண்ணெயில் பொறித்த உணவுகளை அதிகம் விரும்புபவர்கள் செரிமான பிரச்சனையால் அவதிப்படுவர். மழைக்காலங்களில் உணவு செரிக்க அதிக நேரம் எடுத்து கொள்ளும். அந்த சமயங்களில் இந்த டிடாக்ஸ் மூலிகை தேநீர் பருகுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி எளிதில் ஜீரணமாக உதவும். தண்ணீர் 3 கப், துளசி இலை 6 கிளைகள், 1 இன்ச் இஞ்சி, தேன் சுவைக்கேற்ப, எலுமிச்சை 1/2 பழம். துளசி மற்றும் இஞ்சி சேர்த்து தண்ணீரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பாதியாக குறைந்த பிறகு அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பருகவும்.
மூலிகை தேநீர்:
மிகவும் ஆரோக்கியமான இந்த தேநீருக்கு தேவையான பொருட்கள் 1 ஸ்பூன் எலுமிச்சை தைலம், 1 ஸ்பூன் உலர்ந்த லாவெண்டர், 1 ஸ்பூன் உலர்ந்த கெமோமில். ஒரு பெரிய ஜாடியில் அனைத்து பொருட்களையும் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி சூடாக பரிமாறவும்.
ஹெர்பல் க்ளென்சர் டீ
மழைக்கால பருவத்தில் நீங்கள் மிகவும் குளிராக உணர்ந்தால் இந்த தேநீர் உங்களுக்கு மிகவும் பொருத்தமானது. தண்ணீர் 4 கப், மிளகு தூள் 1/2 ஸ்பூன், 1 இன்ச் இஞ்சி, 1 ஸ்பூன் தனியா விதைகள், 3 ஸ்பூன் வெல்லம். தண்ணீரை சூடாக்கி அதில் மிளகு தூள் , தனியா , இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி வெல்லம் சேர்த்து பரிமாறவும்.

சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion