
”ஷாலினி மேடமை நடிக்க கூப்பிட்டால் அஜித் சார் திட்டுவார்” - வெங்கட் பிரபு ஓபன் அப்!
”அது ஃபேஸ் ஆஃப் போலத்தான் இருக்கும் . முதல் பாதியில் தனுஷ் வில்லன். இரண்டாம் பாதியில் சிம்பு வில்லன்”

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கோணத்தில் ஜாலியாக படம் எடுக்கக்கூடிய இயக்குநர் வெங்கட் பிரபு. ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த வெங்கட் பிரபு , பின்னர் இயக்குநராக அறிமுகமானார். மங்காத்தா என்னும் வெற்றி படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் மார்கெட் தாறுமாறாக உயர தொடங்கிவிட்டது. பலக்கட்ட போராட்டத்திற்கு பிறகு , அரசியல் மற்றும் சயின்ஸ் ஃபிக்ஸன் இரண்டையும் இணைத்து , டைம் லூப்பில் மாநாடு படத்தை எடுத்திருந்தார். இந்த படம் வெகுவான பாரட்டை பெற்றதோடு , சிம்புவிற்கு மாமெருப் ரீ-எண்ட்ரியாக அமைந்தது. இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு, கோலிவுட்டின் முன்னணி போட்டி நடிகர்களை ஒன்றாக திரையில் இயக்க வாய்ப்பு கிடைத்தால் என்ன மாதிரியான திரைப்படம் எடுப்பேன் என்பது குறித்து பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram
அதில் "ஷாலினி மேம் ரொம்ப பிஸியான ஹவுஸ் ஒயிஃப். அவங்கள வச்சு படம் எடுக்குறேன்னு சொன்னாலே அஜித் சார் , திட்டுவாரே! ..ஏன்டா ஃபேமிலி மேல கை வைக்குறேன்னு..ஷாலினி மேம் நடிக்க வர்றதுக்கு வாய்ப்பே இல்லை. கார்த்தி சூர்யாவை வைத்து படம் எடுக்கனும்னு நினைத்தால் , நான் சூர்யாவை ஹீரோவாக போட்டுட்டு , கார்த்தியை வில்லனாக போடுவேன். கார்த்தி வில்லனாக நடித்தால் செமயா இருக்கும். கமல் சார் , ரஜினி சாரை வச்சு படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தால் வரப்பிரசாதம் போல. பேட் பாய்ஸ் போல ஒரு படம் பண்ணலாம். நான் சிம்புவையும் தனுஷையும் வச்சு படம் பண்ண எப்போதே முனைப்பு காட்டினேன். ஆனால் அது ஒர்க் அவுட் ஆகல. ஆனால் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் . அப்படி எடுத்தால் அது ஃபேஸ் ஆஃப் போலத்தான் இருக்கும் . முதல் பாதியில் தனுஷ் வில்லன். இரண்டாம் பாதியில் சிம்பு வில்லன்“ என தனது மனம் கவர்ந்த நடிகர்களை ஒன்றாக திரையில் எப்படி இயக்குவேன் என பகிர்ந்திருக்கிறார் வெங்கட் பிரபு.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

