மேலும் அறிய

கடுமையான காய்ச்சல்; MGR சொன்ன வார்த்தை - இயக்குனர் டார்ச்சர் தாங்க முடியாமல் வாலி எழுதிய ஹிட் பாடல்!

படகோட்டி படத்தில் 7 பாடல்கள் எழுதிய வாலி, கடைசியாக 8-ஆவது பாடலை கடுமையான காச்சலில் எழுதி கொடுத்து அந்த பாடல் சூப்பர் ஹிட் அடித்தது பற்றி தெரியுமா?

வாலி பாடல்:

வார்த்தைகளில் வித்தை காட்டக் கூடியவர் வாலி. எம்ஜிஆருக்கு எத்தனையோ ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். இவ்வளவு ஏன், கண்ணதாசனுடன் ஏற்பட்ட மனக்கசப்புக்கு பின் வாலி தான் இனி என் படங்களுக்கு பாடல் எழுதுவார் என்று, எம்.ஜி.ஆர் அதிகார பூர்வமாக அறிவித்த நிலையில் இந்த செய்தி அந்தக்காலத்தில் தலைப்பு செய்தியாக நாளிதழ்களில் வந்தது.

படகோட்டி:

வாலி எம்ஜிஆர் மற்றும் சரோஜா தேவி நடிப்பில் வந்த படகோட்டி படத்திற்கு பாடல் எழுதினர். இந்த படத்தை,  இயக்குநர் டி பிரகாஷ் ராவ் இயக்க, இந்தப்படத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசை அமைந்திருந்தனர். இந்தப் படத்தில் மொத்தமாக 8 பாடல்கள் இடம் பெற்றிருந்தது. இதில் 7 பாடல்களுக்கு கவிஞர் வாலி பாடல் ஏற்கனவே வரிகள் எழுதி கொடுத்துவிட்டார்.

கடுமையான காய்ச்சல்; MGR சொன்ன வார்த்தை - இயக்குனர் டார்ச்சர் தாங்க முடியாமல் வாலி எழுதிய ஹிட் பாடல்!

கடைசியாக ஒரு பாடல் எழுத வேண்டி இருந்தது. அந்த பாடலையும் கவிஞர் வாலி தான் எழுத வேண்டும் என்று எம்.ஜி.ஆர் மிகவும் கறாராக இயக்குனரிடமும், இசையமைப்பாளர்களிடமும் கூறி விட்டார். எனவே வாலியை வைத்தே பாடல் எழுத வேண்டிய சூழல் இருந்தது.

நம்பியாருக்கு பாடல்:

அதுவும் இந்த பாடல் எம்.ஜி.ஆருக்கு அல்ல, வில்லன் நம்பியாருக்காக எழுத வேண்டிய பாடல். நம்பியாருக்கு ஒரு காதலி இருக்கிறாள். அவளை நினைத்து நம்பியார் பாடும் பாடலை தான் கவிஞர் வாலி எழுதி தர வேண்டும் என்று கேட்டு அவரை அணுகியிருக்கிறார்கள். ஆனால், அந்த சமயம் அவருக்கு கடுமையான காய்ச்சல். எழுந்து கூட உட்கார முடியாமல் இருந்ததால், இந்த சூழ்நிலையில் என்னால் பாடல் எழுதி தர முடியாது என்று சொல்லிவிட்டார். 

ஆனால், இயக்குனருக்கோ எம்.ஜி.ஆர் வார்த்தையை மீறும் அளவுக்கு தைரியம் இல்லை. எனவே வாலி தான் எழுதி தர வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கவே, அவரின் நிலையை புரிந்து கொண்டு வேறு வழியில்லாமல் வாலியோ அந்த பாடலுக்கான வரிகளை எழுதி கொடுத்திருக்கிறார். அதுவும் பாடலுக்கான சூழலை சொல்லவே, அதனை ரொமாண்டிக்காக எழுதியிருக்கிறார். அப்படி என்ன சூழல் என்று கேட்டால், தன்னுடைய ஆசை நாயகி இருக்கும் போது எம்ஜிஆரின் காதலியான சரோஜா தேவி மீது காதல் கொண்டு அவரை நினைத்து ஆசை நாயகியை பார்த்து நம்பியார் மது போதையில் பாடல் ஒரு பாடல் தான் இது.

கடுமையான காய்ச்சலில் வாலி எழுதிய பாடல்:

அதற்கேற்ப வாலியும், கடுமையான காய்ச்சலோடு "அழகு ஒரு ராகம், ஆசை ஒரு தாளம்" என்று பாடல் வரிகளை எழுதி கொடுத்திருக்கிறார். உடனே பாடலும் ரெக்கார்டு செய்யப்பட்டு அடுத்தடுத்து வேலைகள் தீவிரமாக நடந்து படப்பிடிப்பும் எடுக்கப்பட்டுள்ளது. படமும் வெற்றிகரமாக ரிலீசாகி ஹிட் கொடுத்துள்ளது. பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டோ ஹிட்டு. இன்றும் இந்த படத்திற்கும், படத்தின் பாடல்களுக்கும் மயங்காத ரசிகர்களே இருக்க முடியாது.

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget