மேலும் அறிய

HBD Simran: “நடிப்பாலும், நடனத்தாலும்” ரசிகர்களை கவர்ந்த நடிகை சிம்ரனின் பிறந்தநாள் இன்று..!

தமிழ் சினிமாவில் தனது நடிப்பாலும் நடனத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை சிம்ரன் என்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். HBDSimran

தமிழ் சினிமாவில் தனது நடிப்பாலும், நடனத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை சிம்ரன் என்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

தனி கதாநாயகி

தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை பொருத்தவரை முன்னணி நடிகைகளின் பட்டியல் என்பது ஆண்டுக்கு ஆண்டு இடம் மாறிக்கொண்டே இருக்கும். இன்று கதாநாயகி நடிக்கும் நடிகைகள் நாளை துணை கதாபாத்திரங்களாக நடிக்க தொடங்குவார்கள். ஒரு கட்டத்தில் அம்மா, பாட்டி போன்ற வயதான தோற்றத்தில் தான் ஜோடியாக நடித்த ஹீரோக்களின் படங்களிலும் கூட நடிக்கக்கூடும். நடிப்பு திறமைகளை கொண்டு நடிகைகள் முன்னேறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 90 களின் பிற்பகுதியில் ஹீரோக்களை மையமாக வைத்து படங்கள் வெளிவர தொடங்கியது.

இத்தகைய படங்களில் ஹீரோயின்கள் கவர்ச்சிக்காகவும், பெயரளவில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தனர். சொல்லப்போனால் கவர்ச்சி பாடல்களுக்கு தனி நடிகைகள் இருந்த இடத்தில் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகைகளே அத்தகைய பாடல்களிலும் கவர்ச்சி காட்ட தொடங்கினர். இதனை மாற்றி மீண்டும் நடிகைகளுக்கு நடிப்பு திறமை உள்ளது என நிரூபித்தவர்களில் நடிகை சிம்ரனும் ஒருவர். ஹீரோயினாக குறைந்த காலம் மட்டுமே சினிமாவில் வலம் வந்த நிலையில், அவர் இன்றளவும் நடிப்புக்காகவும் நடனத்திற்காகவும் ரசிகர்களிடையே மறக்க முடியாத ஒரு இடத்தை பெற்றுள்ளார். 

HBD Simran: “நடிப்பாலும், நடனத்தாலும்” ரசிகர்களை கவர்ந்த நடிகை சிம்ரனின் பிறந்தநாள் இன்று..!

ஆரம்பமே அதிரடி

1976 ஆம் ஆண்டு ஏப்ரல் நாலாம் தேதி மும்பையில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த சிம்ரன் தனது 14வது வயதில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான "சூப்பர் ஹிட் முக்காப்புலா" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பாலிவுட் திரை உலகின் கவனத்தை ஈர்த்தார். அதன் விளைவாக 1995 ஆம் ஆண்டு சனம் ஹர்ஜாய் என்ற இந்தி படத்தில் அறிமுகமானார். ஆனால் 1996 ஆம் ஆண்டு வெளியான தேரே மேரே சப்னே படத்தின் வெற்றி தான் சிம்ரனை பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமாக வைத்தது. தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டியுடன் ‘இந்திரபிரஸ்தம்’, கன்னடத்தில் ஷிவ் ராஜ்குமாருடன் ‘சிம்ஹடா மாரி’ படங்களில் நடித்த பிறகு தமிழில் என்றி கொடுத்தார் சிம்ரன். 

மாஸ் காட்டிய சிம்ரன்

1997 ஆம் ஆண்டு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த வெளியான ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் சிம்ரன் தமிழ் திரை உலகில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அந்த ஆண்டில் வசந்த் இயக்கி விஜய் சூர்யா நடித்த நேருக்கு நேர், சபா இயக்கி பிரபுதேவா அப்பாஸ் நடித்த விஐபி படம் என ஆரம்ப ஆண்டிலேயே தமிழில் மாஸ் காட்டினார் சிம்ரன். இந்த படங்களில் இடம் பெற்ற மனம் விரும்புதே உன்னை , எங்கெங்கே எங்கெங்கே, மின்னல் ஒரு கோடி போன்ற படங்கள் ரசிகர்கள் மனதில் சிம்ரனை சிம்மாசனம் இட்டு அமர வைத்தது.

HBD Simran: “நடிப்பாலும், நடனத்தாலும்” ரசிகர்களை கவர்ந்த நடிகை சிம்ரனின் பிறந்தநாள் இன்று..!

நடிப்பின் ராணி

இதன் பின்னர் அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள் என தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல் ஹிட் படங்களில் நடித்துக் கொண்டிருந்த சிம்ரன் கேரியரில் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், அஜித் நடித்த வாலி படம் மிக முக்கியமானவை. இந்த இரண்டு படங்களும் சிம்மரனின் நடிப்பை அட்டகாசமாக வெளிப்படுத்தி இருந்தது. 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்வதற்கு முன்பாக தமிழ் சினிமாவில் ரஜினி தவிர்த்து மற்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தார் சிம்ரன். 

அதேசமயம் பார்த்தேன் ரசித்தேன் படத்தின் மூலம் வில்வியாகவும் அவர் புதிய பரிணாமம் காட்டியிருந்தார். கோவில்பட்டி வீரலட்சுமி படத்தில் தனி ஹீரோயினாக சம்பவம் செய்தார். இடையில் எதிரும் புதிரும், யூத் ஆகிய படங்களில் ஒரு பாடலில் ஆடியதன் மூலம் டான்சில் தான் என்றும் கில்லி என சிம்ரன் நிரூபித்தார். தமிழ் சினிமாவில் யாரும் டான்ஸ் ஆட முடியாது என்பது போல் இடுப்பை வளைத்து ஆடுதல், மிக கடினமான நடன ஆசைகளை அசால்டாக செய்தல் என ஹீரோக்களுக்கு டப் கொடுப்பார் சிம்ரன். 

2005 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தில் முதலில் ஜோதிகா கேரக்டரில் சிம்ரன் தான் நடிக்கவிருந்தார். ஆனால் அந்நேரம் அவர் கருவுற்றிருந்ததால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் அந்த குறை 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் நீங்கியது.

2008 ஆம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் படங்களின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நடிகை சிம்ரன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் அந்தகன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது சிம்ரனின் திரை வாழ்க்கைக்கு என்றும் முடிவில்லை. புதிதாக வரும் கதாநாயகிகளுக்கு அவர் என்றுமே ஒரு இன்ஸ்பிரேஷன் தான். சிம்ரனின் 

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget