மேலும் அறிய

Hansika Motwani Wedding: சூஃபி இசை.. மெஹந்தி நிகழ்வு.. 450 வருட பாரம்பரிய கோட்டையில் ஹன்சிகா திருமணம்!

நடிகை ஹன்சிகாவின் திருமணம் தொடர்பான சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை ஹன்சிகா சில தினங்கள் முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹன்சிகா அவரது வருங்கால கணவர் சோஹைல் கதுரியாவுடன் பாரீஸில் இருக்கும் ஈபிள் கோபுரம் முன்பு இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டார். இதில் Marry Me என்ற வாசகத்தின் முன்பு ஹன்சிகாவிடம் சோஹைல் கதுரியா ப்ரோபோஸ் செய்யும் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதன்மூலம் ஹன்சிகாவின் திருமண செய்தி உறுதியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansika Motwani (@ihansika)

திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது திருமணம் தொடர்பான சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த தகவல்களின் படி, ‘ ஹன்சிகா சோஹைல் கதுரியா திருமணம் அடுத்த மாதம் டிசம்பர் 4 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக டிசம்பர் 2 ஆம் தேதி சூஃபி இசை கச்சேரியுடன் திருமண விழா தொடங்குகிறது. தொடர்ந்து அடுத்த நாளான டிசம்பர் 3 ஆம் தேதி மெஹந்தி வைக்கும் நிகழ்வு மற்றும் சங்கீத் நிகழ்வும் நடக்க இருக்கிறது. தொடர்ந்து, அடுத்த நாள் காலை ஹல்டி நிகழ்வு நடக்க இருக்கும் நிலையில் அன்றைய தினம் மாலை ஜெய்ப்பூரில் உள்ள  450 வருட பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் வைத்து திருமணம் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், விருந்தினர்களுக்கு அழைப்பிதழ் வைப்பதற்காக இந்திய மற்றும் வெளிநாடு ஆகிய கலாச்சாரம் அடங்கிய அழைப்பதழ்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துடன் கூடுதல் தகவல் என்னவென்றால், நயன்தாராவை போலவே, ஹன்சிகாவும் தனது திருமணத்தை ஒளிப்பரப்பும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு கொடுத்திருப்பதாக சொலலப்படுகிறது. 

ஹன்சிகாவின் வருங்கால கணவர் சோஹைல் கதுரியாவுக்கு இது இரண்டாவது திருமணமாகும். ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு கோவாவில் ரிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பின்னர் விவாகரத்து செய்தார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஹன்சிகா - சோஹைல் கதுரியா இருவரும் தொழில்முறை பார்ட்னராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஹன்சிகாவின் சினிமா வாழ்க்கை 

1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி மங்களூருவில் பிறந்த நடிகை ஹன்சிகா, 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான சின்னத்திரை தொடரான ஷக்கலக்கா பூம் பூம் தொடரின் மூலம் 2000 ஆம் ஆண்டில் தனது கலையுலக வாழ்வில் அறிமுகமானார்.  தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு வெளியான இந்தி படமான எஸ்கேப் ஃப்ரம் தாலிபான் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாகவும், 2007 ஆம் ஆண்டு தேசமுதுரு  என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினும் ஆனார்.  

தொடர்ந்து இந்தி, கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த ஹன்சிகா 2010 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். பின்னர் விஜய், சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், ஜெயம் ரவி, ஜீவா, சிம்பு உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தினார். 

இதில் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே அது முறிந்தது. தொடர்ந்து தனது கேரியரில் கவனம் செலுத்தி வந்த ஹன்சிகா கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Tata Nexon EMI Plan: உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
Syros EV Vs Windsor EV: கியா சைரோஸ் இவி-யா.? எம்ஜி வின்ட்சர் இவி-யா.? ரெண்டுல எத வாங்குறது பெஸ்ட்; இதோ ஒரு முழு ஒப்பீடு
கியா சைரோஸ் இவி-யா.? எம்ஜி வின்ட்சர் இவி-யா.? ரெண்டுல எத வாங்குறது பெஸ்ட்; இதோ ஒரு முழு ஒப்பீடு
Embed widget