ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது கை எலும்பு முறிவு! அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகர்!
சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தன்னுடைய அடுத்தப்படத்திற்காக பாடி லாங்குவேஜை மாற்றும் முயற்சியாக சில நாள்களாக கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டுவந்தார் ஜூனியர் என்டிஆர்.
ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தப்போது எதிர்பாராதவிதமாக ஜூனியர் என்டிஆரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து கையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.
தென்னிந்திய சினிமாத்துறையில் உள்ள முன்னணி நடிகர்கள் அவர்களது உடலில் ஏற்பட்ட பல்வேறு உடல்நலக்குறைவின் காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக ஆப்பரேசன் செய்யப்பட்டு கடந்த சில நாள்களுக்கு முன்னதாக வீடு திரும்பிய நிலையில் ஒய்வெடுத்துவருகிறார். இதனையடுத்து சென்ற மாதமே தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு நரம்பு பிரச்சனைக் காரணமாக வலது கையில் ஆபரேசன் செய்யப்பட்டது. இவர்களைத்தொடந்து தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவிற்கு இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சர்ஜரி செய்யப்பட்டது. இச்சம்பவங்கள் ரசிகர்களுக்கிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்திய நிலையில், விரைவில் குணமடைய வேண்டும் என பிராத்தனை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் தான் அதன் தொடர்ச்சியாக மற்றொரு பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆரும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதற்கான மருத்துவமனையில் நடந்த அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் உள்ளார். பாகுபலி, நான் ஈ, போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராஜமௌலி தற்போது ஆர் ஆர் ஆர் படத்தினை இயக்கி வந்த நிலையில் தற்போது வெற்றிக்கரமாக படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இப்படம் வருகின்ற ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ராம் சரணுடன் இணைந்து மற்றொரு ஹூரோவாக நடித்த ஜூனியர் என்டிஆருக்கு தான் தற்போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தன்னுடைய அடுத்தப்படத்திற்காக பாடி லாங்குவேஜை மாற்றும் முயற்சியாக சில நாள்களாக கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டுவந்தார் ஜூனியர் என்டிஆர். இதன் ஒரு பகுதியாக ஜிம்மில் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தப்போது தவறி விழுந்தததில் தான் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது ஜூனியர் என்டிஆர் ஓய்வில் இருந்து வருகிறார். இவர் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் சிறப்பு பிராத்தனை செய்து வருகின்றனர். இதோடு சோசியல் மீடியாக்களில் அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்துவருகின்றனர். ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைப்பிரபலங்கள் பலரும் ஜூனியர் என்டிஆர் விரைவில் குணமடைந்து வழக்கமான பணிக்கு திரும்பி வர வேண்டும் என்று தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.
தெலுங்கு நடிகரான ஜூனியர் என்டிஆர் தன்னுடைய சிறுவயதில் நடித்த பிரம்ம ரிஷி விஷ்வாமித்ரா மற்றும் இராமாயணம் திரைப்படத்தில் நடித்ததோடு மட்டுமில்லாமல் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதினைப்பெற்றவர். இதனையடுத்து கடந்த 2001 ஆம் ஆண்டு நின்னு சூடாலனி திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்ததோடு பல்வேறு வெற்றிப்படங்களிலும் தொடர்ச்சியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.