மேலும் அறிய
Advertisement
G.V.Prakash: ஒரு பாடலுக்கு இத்தனை மெனக்கெடலா - சைரன் படத்திற்காக உழைத்த ஜிவி பிரகாஷ் - வீடியோ
G.V.Prakash: சைரன் படத்தின் பாடலுக்கு ஜிவி பிரகாஷ் ரிகர்சல் பார்த்து இசையமைத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
G.V.Prakash: ஜெயம் ரவி நடிக்கும் சைரன் படத்தின் பாடலுக்கு இசையமைப்பாளார் ஜிவி பிரகாஷ் ரிகர்சல் பார்த்து இசையமைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் சைரன் படம் பிப்ரவரி மாதம் 16ம் தேதி ரிலீசாக உள்ளது. படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்துள்ளதால் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபாமா நடித்துள்ளனர். பிரமாண்டமாக உருவாகியுள்ள சைரன் படம் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாகவும், குடும்ப சென்டிமெண்ட் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சைரன் படம் வெளியாவதற்கு சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. நேற்று வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தாமரை வரிகள் பாடல் வரவேற்பை பெற்றது. ஜிவி பிரகாஷ் இசையில், சித் ஸ்ரீராம் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்டானது. இந்த நிலையில் அந்த பாடலுக்கு ஜிவி பிரகாஷ் ரிகர்சல் பார்த்து இசையமைத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
During rehearsals before take a small jam for #Netruvarai with @sidsriram for #siren … @SonyMusicSouth pic.twitter.com/td363mSakj
— G.V.Prakash Kumar (@gvprakash) January 30, 2024
இதற்கு முன்னதாக விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களுக்கு வசனங்கள் எழுதியுள்ள ஆண்டனி பாக்கியராஜ் சைரன் படத்தை இயக்கி இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி கைதி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என இருவேறு கேரக்டர்களில் நடித்துள்ளார். பாடல் வரிகளுக்கு அதிக நேரம் செலவழித்து மெனக்கெட்டு ஜிவி பிரகாஷ் இசையமைத்த விதம் பாடலுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது.
கடந்த ஆண்டின் இறுதியில் சைக்கோ த்ரில்லர் படமாக ஜெயம் ரவியின் இறைவன் படம் வெளியானது. அதேபோன்ற ஒரு ஆக்ஷன் ஜானரில் சைரன் படம் உருவாகி இருப்பதால் படத்திற்கு எந்த மாதிரியான வரவேற்பு இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இறைவன் படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இருந்ததால் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: Ashok Selvan: ”எனது படத்தில் இப்படி நடக்கும் என்று நான் நினைத்ததே இல்லை” - அதிர்ச்சியில் அசோக் செல்வன்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion