மேலும் அறிய

Ashok Selvan: ”எனது படத்தில் இப்படி நடக்கும் என்று நான் நினைத்ததே இல்லை” - அதிர்ச்சியில் அசோக் செல்வன்

Ashok Selvan: ”முதன் முதலில் எனது படத்தில் ஹீரோ இண்ட்ரோவுக்காக விசில் பறந்ததை பார்த்தேன். இதுக்கு முன்னதாக எந்த படத்திலும் இப்படி இருந்தது இல்லை” - அஷோக் செல்வன்

Ashok Selvan: இதுக்கு முன்னாடி எனது படத்துக்கு இப்படி ஒரு விசில் பறந்ததே இல்லை என ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி குறித்து நடிகர் அசோக் செல்வன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 
 
நடிகர் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடிப்பில் வெளிவந்த ப்ளூ ஸ்டார் படம் வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் எஸ். ஜெயக்குமார் இயக்கிய படத்தை லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடெக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. படத்தில் நடிகர் அசோக் செல்வனுடன் இணைந்து கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 
 
இந்த நிலையில் இன்று ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி கொண்டாடப்பட்டது. படத்தின் இயக்குநர் ஜெயகுமார் மற்றும் பா. ரஞ்சித், பாடகர் அறிவு மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றியை கொண்டாடினர். இதற்கிடையே, ப்ளூ ஸ்டார் படம் உருவான விதம் குறித்து நடிகர் அசோக் செல்வன் பேசியுள்ளார். அதில், “மக்களுக்கு பிடித்தால் தான் ஒரு படம் வெற்றிபெறும். சமூகத்துக்கு தேவையான ஒரு கருத்தை ப்ளூ ஸ்டார் படம் இருக்கும். இந்த படத்தில் நடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி. ரஞ்சித் அண்ணா உள்ளிட்ட டீம் எனக்கு ரொம்ப பிடித்தது. சினிமாவுக்குள் நான் வந்து 10 ஆண்டுகள் கடந்து விட்டது. இது எனக்கு 19வது படம். ப்ளூ ஸ்டார் படத்தில் ரஞ்சித் என்ற கேரக்டரில் நான் நடித்திருக்கிறேன். முதன் முதலில் எனது படத்தில் ஹீரோ இண்ட்ரோவுக்காக விசில் பறந்ததை பார்த்தேன். இதுக்கு முன்னதாக எந்த படத்திலும் இப்படி இருந்தது இல்லை. 
 
 
முன்னதாக படத்தின் ஸ்கிரிப்டை நான் படித்தேன். அதில் ரஞ்சித் என்ற கேரக்டர் என்னை தனிப்பட்ட முறையில் ஈர்த்தது. நான் சினிமாவுக்குள் வரும்போது இருந்த தாக்கமும், அதன் முயற்சியும் இந்த படத்தில் இருந்ததை பார்த்தேன். எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும், சரிசமம் என்பதை நான் நினைப்பவன். அதையே படத்தின் கதையாக இருப்பது பிடித்திருந்தது. 
 
படத்தில் எனது நிறத்தை மாற்ற ரொம்ப கஷ்டப்பட்டோம். அரக்கோணம் மிகவும் வெப்பமான பகுதியாக இருந்தாலும், எனது நிறத்தை குறைக்க மெரினா மணலில் எண்ணெய் தடவிக்கொண்டு படுத்திருப்பேன். பின்னர், அரக்கோணத்தில் கிரவுண்டில் ஷூட் நடைபெற்றதால் தானாகவே எனது நிறம் கருமையாக மாறியது” என்றார். 
 
மேலும் தனது மனைவியும், நடிகையுமான கீர்த்தி பாண்டியன் குறித்தும் அசோக் செல்வன் பகிர்ந்து கொண்டார். அதில், “ப்ளூ ஸ்டார் படத்தில் நானும், கீர்த்தி பாண்டியனும் காதலர்களாக இருந்தோம். அதனால், ஒருவருக்கு ஒருவர் பேசி எப்படி நடிக்க வேண்டும் என்று விவாதிப்போம். காதலிக்கும்போது திருமணம் செய்ய வேண்டுமா என்ற பயம் ஏற்பட்டது. ஒரு குடும்பத்தை வழி நடத்துவது பெரிய பொறுப்பு. அந்த நம்பிக்கை கீர்த்தியிடம் இருந்ததால் திருமணம் செய்து கொண்டேன்” என்றார்.
 
 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget