நீங்களும் சுந்தர் பிச்சை ஆக வேண்டுமா... இந்த 5 பாடல்கள் தான் ‛வார்ம் அப்’ !
சுந்தர் பிச்சை பிறந்தநாளில் நாமும் அவரை போல் உழைத்து முன்னேறத் தூண்டி உத்வேகம் அளிக்கும் பாடல்கள் சிலவற்றை கேட்போம்.
A for ஆப்பிள், B for பால், C for கேட், D for டாக் என்ற வரிசை வரும் போது, G for என்றால் கூகுள் என்று தான் இப்போதுள்ள குழந்தை கூட கூறும். அந்த அளவிற்கு எல்லாம் கூகுள் மயம். கூகுள் எந்த அளவு பிரசித்தமோ, அதன் சிஇஓ சுந்தர் பிச்சையும் பிரசித்தமானவர். உலகை உள்ளங்கையில் இருந்து விரல் நுனிக்கி நகர்த்திச் சென்றதில் பெரும்பங்காற்றியவர் . இன்று 49 வது பிறந்தாளை கொண்டாடும் சுந்தர்பிச்சை தமிழர் என்பதும், உலகம் ஒரு தமிழனின் விரல் அசைவில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் நமக்கு பெருமையே. அவருடைய பிறந்தநாளில் நாமும் அவரை போல் உழைத்து முன்னேற தூண்டி உத்வேகம் அளிக்கும் பாடல்கள் சிலவற்றை கேட்போம்.
1. வெற்றி நிச்சயம்:
அண்ணாமலை திரைப்படத்தில் இடம்பெற்ற 'வெற்றி நிச்சயம்' பாடல் தோல்விகளை கண்டு துவண்டு உள்ளவர்களுக்கு நல்ல நம்பிக்கை தரும் பாடலாக அமைந்திருக்கும். தேவாவின் இசை மற்றும் எஸ்பிபியின் குரல் இப்பாடலுக்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்கும். இப்பாடலில் குறிப்பாக,
"இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்
மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்
பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே
எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே...."
2. வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா:
படையப்பா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் பாடல் வரிகள் நம்மை உழைக்க தூண்டும் வகையில் இருக்கும். குறிப்பாக இதில்,
"வெற்றி கொடி கட்டு
பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு
படையெடு படையப்பா..."
3. எல்லா புகழும் ஒருவனுக்கே:
அழகிய தமிழ்மகன் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. ஏஆர்.ரஹ்மான் இசையில் அமைந்த இப்பாடலின் வரிகள் நம்மை முன்னேற்றத்திற்கு தூண்டும் வகையில் இருக்கும்.
"நீ நதி போலே ஓடிக்
கொண்டிரு எந்த
வோ்வைக்கும் வெற்றிகள்
வோ்வைக்குமே உன்னை
உள்ளத்தில் ஊா் வைக்குமே"..
4. எதிர் நீச்சல் அடி:
எதிர்நீச்சல் திரைப்படத்தில் அனிரூத் இசையில் இடம்பெற்ற உத்வேகம் அளிக்கும் பாடல் எதிர் நீச்சல் அடி என்ற பாடல். இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளும் நமக்கு நல்ல உற்சாகத்தை தரும். குறிப்பாக,
"நாளை என்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் தேவன் கைபொம்மைகளே...
என்றால் கூட போராடு நண்பா
என்றைக்கும் தோற்காது உண்மைகளே...
உசேன் போல்ட்டை போல் நில்லாமல் ஓட
கோல்டு தேடி வரும்...
உந்தன் வாழ்வும் ஓர் ஒலிப்பிக்கை போலே..
வியர்வை வெற்றி தரும்..."
5. ஆளாப்போறான் தமிழன்:
தமிழர்கள் அனைவருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற இந்தப் பாடலை கேட்கும் போது எதாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றும். அத்தகைய சிறப்பான பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளும் நம்மை வெற்றிக்கு உழைக்க தூண்டும் வகையில் இருக்கும். ஒரு தமிழராக பிறந்து உலகத்தின் முன்னணி தொழில்நுட்ப தலைவராக உயர்ந்த சுந்தர் பிச்சைக்கும் இந்தப் பாடல் சிறப்பாக பொருந்தும்.
"ஆளப்போறான் தமிழன்
உலகம் எல்லாமே வெற்றிமக
வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த
நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய
அவன் தந்தானே..."
இவை தவிர தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குது, சிங்கப்பெண்ணே உள்ளிட்ட இன்னும் சில முன்னேற்றத்திற்கான பாடல்களும் அமைந்துள்ளன.
மேலும் படிக்க:டாலர்கள் சரணடைந்த சுந்தர் பிச்சையின் தனி சர்க்கார்!