May Month OTT Release: மே மாதம் ஓடிடி ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம ட்ரீட்! டாப் 5 படங்களின் பட்டியல் இதோ!
குட் பேட் அக்லீ முதல் துடாரம் வரை, மே 2025 இந்த மாதம் ஓடிடிக்கு வரும் படங்களின் பட்டியல் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மே 2025 மாதம் பிறந்த நிலையில், புதிய படங்களின் வரவு அதிகமாக இருப்பதால் ஏற்கனவே திரையில் ஓடிக் கொண்டிருக்கும் படங்கள் ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட உள்ளது. அதன்படி மே மாதம் ஓடிடிக்கு வரும் படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் 'குட் பேட் அக்லி கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜூன் தாஸ், சுனில், பிரியா பிரகாஷ் வாரியர், பிரசன்னா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அஜித் தனது மகனுக்காக மீண்டும் கேங்கஸ்டராக மாறி தன்னுடைய ஆக்ஷன் ருத்ர தாண்டவத்தை துவங்கும் நிலையில், மகனை ஒரு கொலை கேசில் இருந்து காப்பாறுகிறாரா? இல்லையா? என எதிர்பாராத திருப்புமுனையுடன் இந்த படம் வெளியானது. திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் குட் பேட் அக்லி மே- 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
ப்ரோமன்ஸ்:
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான படம் தான் ப்ரோமன்ஸ். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் அர்ஜூன் அசோகன், சங்கீத் பிரதாப், மஹிமா நம்பியார், மேத்யூ தாமஸ் ஆகியோர் பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமான இன்று சோனி லைவ்வில் வெளியாகியிருக்கிறது.
துடாரம்:
கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் துடாரம். மோகன் லால், ஷோபனா, பிரகாஷ் வர்மா ஆகியோர் பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். தருண் மூர்த்தி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். க்ரைம் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது வரை சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளதாக கூறப்படும், இந்தப் படம் இந்த மே மாதத்தில், ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராபின்ஹூட்:
நடிகர் நிதின், ஸ்ரீலீலா, ராஜேந்திர பிரசாத், வென்னெல கிஷோர், டேவிட் வார்னர் (கிரிக்கெட்) ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த மார்ச் 28ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் ராபின்ஹூட். எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்ட இந்தப் படம் ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் வெறும் ரூ.8 கோடி வரையில் வசூல் குவித்தது. வெளியாகி ஒரு மாதத்திற்கு பிறகு இந்தப் படம் நாளை மே 2ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
வருணன்:
ஜெயவேல்முருகன் இயக்கத்தில் உருவாகியிருந்த வருணன் கடந்த மார்ச் 14ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்தப் படத்தில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ராதா ரவி, சரண்ராஜ், கேப்ரியல்லா சார்ல்டன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையில் மே 1ஆம் தேதியான இன்று ஆஹா ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.





















