"அஜித்தை பேர் சொல்லி கூப்பிடக் கூடாது என்றார்கள்"..குட் பேட் அக்லி நடிகர் அதிர்ச்சி...
குட் பேட் அக்லி படத்தில் நடிகர் அஜித்தை பெயர் சொல்லி அழைத்ததற்காக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னை கண்டித்ததாக அப்பட நடிகர் தெரிவித்துள்ளார்

குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இப்படியான நிலையில் குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக நடித்த ரகு ராம் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்
பேர் சொல்லி கூப்பிட கூடாது
இந்தி பஞ்சாபி மொழிப்படங்களில் நடித்துள்ளார் நடிகர் ரகு ராம் . தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக நடித்துள்ளார். குட் பேட் அக்லி படத்தில் நடித்த அனுபவத்தை சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அப்போது அவர் " நான் டெல்லியில் வளர்ந்தவன். நாங்கள் எங்களுடைய உயர் அதிகாரிகளை பெயர் சொல்லிதான் அழைப்போம். நான் படப்பிடிப்பிற்கு சென்றபோது அஜித் வந்து தன்னை அறிமுமப்படுத்திக் கொண்டார். அவருக்கு எனக்கும் ஒரே வயதுதான் என்பதால் நான் அவரை அஜித் என்று பெயர் சொல்லி அழைத்தேன். நான் அவரை பெயர் சொல்லி அழைப்பதைப் பார்த்து ஒட்டுமொத்த செட் அதிர்ச்சியடைந்தது. அவரை பெயர் சொல்லி அழைப்பது அவமானப்படுத்துவது என்று படக்குழு என்னிடம் சொன்னார்கள். பின் ஸ்பெயின் சென்றபோது ஆதிக் என்னிடம் அஜித்தை பெயர் சொல்லி அழைக்க கூடாது என்று கண்டித்தார். அதன்பின் நான் அவரை சார் என்று அழைப்பதாக சொன்னேன். " என அவர் தெரிவித்துள்ளார்
இது என்ன மிரட்டலா ?
ஒருவரின் பெயர் சொல்லி அழைப்பதே அவருக்கு கொடுக்கும் அதிகபட்ச மரியாதைதான் . அந்த வகையில் சார் என்றுதான் அழைக்க வேண்டும் என்று எந்த வித கட்டாயமும் இல்லை. அந்த வகையில் ரகு ராமை குட் பேட் அக்லி படக்குழுவினர் நடத்தியது கண்டிக்கத் தக்கது என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் ஸ்டார் அந்தஸ்தை விரும்பாத அஜித் குமார் இதை எல்லாம் எப்படி அனுமதித்தார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

