ஜி.வி பிரகாஷ் கொடுத்த வாடிவாசல் அப்டேட்..
வெற்றிமாறன் சூர்யா கூட்டணியில் வெளியாக இருக்கும் வாடிவாசல் படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டார் இசைமைப்பாளர் ஜி.வி . பிரகாஷ்.
சூரரைப்போற்று வெற்றிக்கு பிறகு சூர்யா மற்றும் ஜி.வி . பிரகாஷ் இணையும் அடுத்த திரைப்படம் "வாடிவாசல் " . இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்தை இயக்க, கலைப்புலி தாணு இப்படத்தை தயாரிக்கிறார் .சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியின் முதல் படம் இது . சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி இந்த படம் இருக்கும் என்று வெற்றிமாறன் குறிப்பிட்டு இருந்தார் .
இந்நிலையில் , அடுத்து நவரசா என்ற ஆந்தாலஜியில் கவுதம் மேனன் கதையில் நடித்துள்ளார் சூர்யா. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் . பாண்டியராஜன் படம் முடிந்த பிறகு வெற்றிமாறன் படத்தின் ஷூட் தொடங்கப்படும் என்று செய்திகள் வெளியானது . படம் முழுக்க ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இருக்கக்கூடும் என்று கடந்த வருடம் வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில் அனைவருக்கும் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

The music work for #VaadiVaasal starts today .... 🔥 @Suriya_offl @VetriMaaran @theVcreations
— G.V.Prakash Kumar (@gvprakash) April 13, 2021

ஏப்ரல் 13 வாடிவாசல் மியூசிக் பணி தொடங்கப்பட்டது என்று இப்படத்தின் இசைமைப்பாளர் ஜி.வி . பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . அசுரன் பிறகு வெற்றிமாறன் , ஜி .வி கூட்டணி மீண்டும் இணைகிறது . ரசிகர்களிடம் மீண்டும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷின் இந்த ட்விட்டைக் கண்டு உற்சாகமான சூர்யா ரசிகர்கள் வாடிவாசல் எனும் ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.