(Source: ECI/ABP News/ABP Majha)
G.V. Prakash at Delhi : தேசிய விருதோடுதான் திரும்புவேன்... டெல்லிக்கு பறந்த ஜி.வி. பிரகாஷ்
68-வது தேசிய விருது வழங்கும் விழா இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நாளை (செப்டம்பர் 30) நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் டெல்லி சென்றுள்ளார்.
இந்திய திரைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் சிறந்த திரைப்படங்களுக்கு தேசிய விருது வழங்கப்படும். அந்த வகையில் 2020ம் ஆண்டுக்கான 68 வது தேசிய விருது பெரும் திரைப்படங்களின் பட்டியல் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்.
சூரரை போற்று படத்திற்கு 5 தேசிய விருதுகள்:
அந்த வகையில் 2020ம் ஆண்டு அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியான "சூரரைப் போற்று" திரைப்படம் 5 தேசிய விருதுகளை தட்டி சென்றது. 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் சூர்யா - ஜோதிகா தயாரித்த இப்படத்தினை இயக்கி இருந்தார் சுதா கொங்காரா. இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட், பூ ராமு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இப்படம் சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர் என ஐந்து பிரிவுகளில் தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.
சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி, சிறந்த படம் சூரரை போற்று, சிறந்த திரைக்கதை சுதா கொங்காரா, சிறந்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்.
. @gvprakash at New Delhi for #NationalAward function.🏅 #BestMusicDirector #SooraraiPottru pic.twitter.com/nUlCY9NIIt
— Rajasekar (@sekartweets) September 29, 2022
டெல்லிக்கு பறந்த ஜி.வி :
68வது தேசிய விருது வழங்கும் விழா இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நாளை (செப்டம்பர் 30) நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் டெல்லி சென்றுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
• The 68th National Film Awards function will held on September 30th !@Suriya_offl
— Sharun shaji (@sharunshaji9188) September 27, 2022
🏆😎 #Vanangaan | #Suriya42 #suriya #SooraraiPottru #aparnabalamurali #sudhakongara #GVPrakash #VaadiVaasal #NationalAward pic.twitter.com/1SnJR4Ao7A
சூரரைப்போற்று திரைப்படம் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள், திரை விமர்சகர்கள் என அனைவரின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது தனித்துவமான இசையால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்த தோடு பல படங்களில் ஹீரோவாக நடித்தும் வருகிறார். சமீபத்தில் அவர் இசையமைப்பில் வெளியான திரைப்படம் "யானை". மேலும் கேப்டன் மில்லர், அடங்காதே, வணங்கான், சர்தார், வாடிவாசல் உள்ளிட்ட படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.