மேலும் அறிய

Female Villains: வில்லிகளாக வந்து விரெட்டியெடுத்த பெண் நடிகர்கள்.. ஒரு ரவுண்ட் அப்

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பெண் கதாபாத்திரங்களைப் பார்க்கலாம்

 தமிழ் சினிமாவில் பெண் வில்லன் கதாபாத்திரங்களுக்கு எப்போதும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. நடிகையர் கடந்த காலத்தில்  வெளியானப் படங்களில் தங்களது நடிப்பால் அனைவரது மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதே இதற்கு முக்கியக் காரணம்.தமிழ் சினிமாவில்  பெண்கள் வில்லிகளாக நடித்து கலக்கிய சில  கேரக்டர்களைப் பார்க்கலாம்.

நீலாம்பரி (படையப்பா)

பெண் வில்லன் கதாபாத்திரம் என்றால் அதில் நீலாம்பரி இடம்பெறாமல் இருக்க முடியாது. மிடுக்கான, கெத்தான் ஒரு பெண் நீலாம்பரி. படையப்பா மாதிரியான ஒரு ஆணிடம் ஈர்க்கப்படுகிறார். அவரை அடைய முடியாத கோபத்தில் 18 ஆண்டுகள் ஒரே அறையில் கழிக்கிறார். எதிரியான படையப்பா தன் உயிரை காப்பாற்றிய ஒரே காரணத்திற்காக தன் உயிரைத்தானே எடுத்துக்கொள்கிறார்.

ஈஸ்வரி (திமிரு)

கிட்டதட்ட நாம் அனைவரும் பார்த்து மிரண்டுபோன ஒரு கதாபாத்திரம் என்றால் அது திமிரு படத்தில் ஈஸ்வரியின் கதாபாத்திரம். கட்டபஞ்சாயத்து செய்யும் மதுரைப் பெண்ணாக ஈஸ்வரியின் கதாபாத்திரம்  வடிவமைக்கப்பட்டிருக்கும். கடனை திருப்பிக் கொடுக்காத ஆண்களை நடுரோட்டில் இழுத்து போட்டு அவமானப் படுத்துவார் ஈஸ்வரி. இந்த மாதிரியான ஒரு பெண் ஒருவனிடம் காதல் கொண்டால் அவள் அவனை அடைவதற்கு எந்த மாதிரியான அணுகுமுறையை கையாள்வாள் என்று காட்டப்பட்டிருக்கும். திமிரு என்று படத்தின் பெயர் ஈஸ்வரியின் கதாபாத்திரத்தோடு மிகச் சரியாகப் பொருந்திப்போகக் கூடியதாக இருக்கும்.

கீதா (வல்லவன்)

தன்னை காதலிப்பதாக ஒருவன் தன் பின்னால் அலைகிறான் என்றபின் அவனை எந்த மாதிரி எல்லாம் சோதிக்க முடியுமோ அத்தனை வகைகளிலும் சோதிக்கக் கூடிய ஒரு கதாபாத்திரம் தான் கீதா. ஆனால் எங்கு இந்த கவனம் ஒரு கட்டத்திற்குமேல் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயத்தில் கீதா வல்லவனை சந்தேகப்படத் தொடங்குகிறார். ஒவ்வொரு முறையும் அவனை தனது காதலை நிரூபித்துக் காட்டச் சொல்கிறார். தன்னை நிராகரித்து விட்டுச் செல்லும் ஒருவனை பழிவாங்கத் துடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தை கண்முன் நிறுத்தியிருப்பார் ரீமா சென்

 அனிதா பாண்டியன் (ஆயிரத்தில் ஒருவன்)

ரீமா சென் வில்லன் கதாபாத்திரத்தில் அசாத்தியமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தக் கூடியவர்.பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த அனிதா பாண்டியன். சோழர்களை கண்டுபிடித்து அவர்களை அழிக்க துடிக்கும் ஒரு கதாபாத்திரம்.

ருத்ரா (கொடி)

த்ரிஷா நடித்த ருத்ரா கதாபாத்திரம் அரசியல் ஆர்வம் கொண்ட ஒரு பெண். அரசியல் என்றால் பொதுவாக ஆண்கள் அதிகம் இருக்கும் ஒரு சூழலில் எப்படியாவது பதவிக்கு செல்ல வேண்டும் என்கிற கனவை தூக்கி சுமப்பவர். இதற்காக தனது காதலனான கொடியை கொலை செய்கிறார். குற்றவுணர்வு அவர் மனதில் இருந்தாலும் தனது லட்சியத்தை யாருக்காகவும் விட்டுகொடுக்க தயாராக இல்லாத உணர்வை வெளிப்படுத்தியிருப்பார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget