கோவையில் கொலைவெறி தாக்குதல்!போதை கும்பலிடம் சிக்கிய இளைஞர்பகீர் வீடியோ
கோவையில் மதுபோதையில் நடந்து சென்ற இளைஞரை கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் கூட்டம் ஒன்று சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதி பகுதியில் உள்ள பாரதி நகரில் நேற்று இரவு வெற்றி என்ற இளைஞர் மதுபோதையில் நடந்து வந்துள்ளார். அப்போதை வழிமறித்த சில இளைஞர்கள் வெற்றியை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் ஒருவர் கல்லை தூக்கிப்போட்டு வெற்றியை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து நிலைகுலைந்து மயங்கி விழுந்த வெற்றியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த இளைஞர்கள் கஞ்சா போதையில் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட 6 இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கஞ்சா போதையில் இல்லை மதுபோதையில் தான் இருந்துள்ளனர் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் திருத்தணி வேளச்சேரி தொடர்ந்து தற்போது கோவையிலும் இதுபோன்ற தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.





















