மகள் வயதிற்கு வந்ததை கொண்டாடிய ஏ.ஆர் முருகதாஸ்..இதான் உங்க அரசியலா ? வெளுக்கும் நெட்டிசன்ஸ்
இயக்குநர் முருகதாஸ் தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ள நிலையில் முருகதாஸை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்

மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் முருகதாஸ் ஆட்டம்
தமிழ் மற்றும் இந்தியில் கமர்சியல் வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் முருகதாஸ். அவரது சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் இன்று அவரது மகள் ஹர்ஷிதாவிற்கு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனது மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து முருகதாஸ் கணிமா பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தனது படங்களில் கம்யூனிஸம் தொடங்கி பல அரசியலை பேசும் முருகதாஸ் தனது மகள் வயதிற்கு வந்ததையா இப்படி ஊரை கூப்பிட்டு கொண்டாடுகிறார். அவர் பேசிய அரசியல் படங்களுக்கு மட்டும் தானா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்
@ARMurugadoss dancing and vibing to the #kanimaa song along with their family 🕺💃💥@Suriya_offl @karthiksubbaraj @Music_Santhosh @Lyricist_Vivek @stonebenchers #Retro pic.twitter.com/noAtWvQBli
— Ap Arun Suriya (@ApArunSuriya) June 16, 2025
மதராஸி
அஜித் சுரேஷ் கோபி நடித்த தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ. ஆர் முருகதாஸ். தோடர்ந்து விஜய்காந்த் நடித்த ரமணா , சூர்யா நடித்த கஜினி ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. விஜயுடன் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி கத்தி ஆகிய இரு படங்களும் வசூல் ரீதியாக ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களாக அமைந்தன. மகேஷ் பாபுவுடன் ஸ்பைடர் , ரஜினியுடன் தர்பார் , மூன்றாவது முறையாக விஜயுடன் சர்கார் , சமீபத்தில் இந்தியில் சல்மான் கான் நடித்து வெளியான சிகந்தர் ஆகிய படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன.
தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தை இயக்கியுள்ளார் முருகதாஸ். வித்யுத் ஜம்வால் , பிஜூ மேனன் , ருக்மினி வசந்த் , விக்ராந்த் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மதராஸி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னை எல்.ஐ.சி அருகில் இந்த படத்தின் பாடல்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில் அடுத்தகட்ட அப்டேட் கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். தொடர் தோல்விகளுக்குப் பின் ஏ.ஆர் முருதகதாஸின் கம்பேக் படமாக மதராஸி படம் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.





















