மேலும் அறிய
Advertisement
அஜித் பிறந்தநாள்... தூய்மை பணியாளர்களுடன் கொண்டாடிய ரசிகர்கள் - ஆம்பூரில் நெகிழ்ச்சி
தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து அஜித் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்.
ஆம்பூரில் நடிகர் அஜித் குமார் பிறந்தநாளை தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு சால்வை அணிவித்து அரிசி மற்றும் அன்னதானம் வழங்கி, கேக் வெட்டி அஜித் ரசிகர்கள் கொண்டாடினர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்களும் அஜித் பிறந்தநாள் தொடர்பான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதனிடையே ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முழுவதும் வழங்கி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறி தமிழ் ரசிகர்களால் தல மற்றும் ஏ.கே என அன்புடன் அழைக்கபடும் நடிகர் அஜித் குமார் பிறந்தநாளையொட்டி, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ- கஸ்பா பகுதியை சேர்ந்த ஆம்பூர் நகர்மன்ற உறுப்பினர் வசந்த்ராஜ் தலைமையிலான அஜித் ரசிகர்கள், ஏ- கஸ்பா, மந்தகரை பகுதியில் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைத்து, ஆம்பூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி, பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, அவர்களுக்கு 2 கிலோ மதிப்பிலான அரிசிகள் வழங்கி, தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி அஜித் குமார் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினர்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion