ஃபஹத் பாசில் - நஸ்ரியா ஜோடியுடன் இசைப்புயல்: வைரலாகும் புகைப்படம்!
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் ஃபஹத் பாசில், நஸ்ரியா சேர்ந்து எடுத்துக் கொண்ட க்யூட்டான புகைப்படம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
நடிகர் பஹத் பாசில் நஸ்ரியா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிது.
நடிகர் ஃபஹத் பாசில், மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். புஷ்பா திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் இந்த மாதம் 29 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் வடிவேலு, உதயநிதி, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மாமன்னன் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் ஃபஹத் பாசில். முன்னதாக விக்ரம், வேலைக்காரன் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். அதேபோல், தெலுங்கில் புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் டோலிவுட் ரசிகர்களிடமும் ரீச் ஆகியுள்ளார்.
இந்நிலையில் மாமன்னன் படத்தின் ட்ரெய்லரில் ஃபஹத் பாசிலின் கேரக்டர் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடூரமான வில்லன் கேரக்டரில் மிரட்டியுள்ளார் ஃபஹத். இந்தப் படத்தின் பின்னணி இசையமைக்கும் பணிகளில் ஃபஹத் பாசில் நடிப்பைப் பார்த்து ஏ.ஆர். ரஹ்மான் மிரண்டு போனதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜிடம் பேசிய போது, "ஃபஹத் பாசிலின் நடிப்பை பார்த்து எனக்கு பயம் வந்துவிட்டது. தயவுசெய்து அவரை சில ரொமன்ஸ் பின்னணிக் கொண்ட படங்களில் நடிக்க சொல்லுங்க. இப்படியெல்லாம் நடித்தால் அவரை நேரில் பார்க்கவே பயமாக இருக்கிறது" எனக் கூறியதாக மாரி செல்வராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
தனது அபார நடிப்பின் மூலம் ஃபஹத் பாசில் ஏராளமான பட வாய்ப்புகளை தொடர்ந்து பெற்று வருகிறார். கடந்தாண்டு ஃபஹத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'மலையான்குஞ்சு' என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார் ஏஆர் ரஹ்மான். அந்தப் படத்திலும் குரூரமான கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார் ஃபஹத். தற்போது மாமன்னன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ள நிலையில் இப்படத்திலும் ஃபஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார்.
இந்நிலையில், ஃபஹத் பாசில், நஸ்ரியா ஆகியோரை ஏஆர் ரஹ்மான் திடீரென சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது. சமூக வலைதளங்களில் இருந்து சிறிய ப்ரேக் எடுக்கப்போவதாக நஸ்ரியா கடந்த மாதம் தெரிவித்திருந்தார், இந்நிலையில் தனது கணவர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட குழு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நஸ்ரியா பகிர்ந்துள்ளார்.
With The Legend himself @arrahman Sir 😉✨ pic.twitter.com/F67l9dI0Df
— Nazriya Nazim Fahadh (@Nazriya4U_) June 25, 2023