மேலும் அறிய

Etharkkum Thunindhavan : "போராட்டம் விளம்பரம் ஆகக்கூடாது!" - எதற்கும் துணிந்தவனை புறக்கணிக்கும் பாமக!

நமது போராட்டம், எதிரிகளுக்கான விளம்பரம் ஆகிவிடக் கூடாது என்று பாமகவை சேர்ந்த அருள்ரத்தினம் என்பவர் தனது பேஸ்ஃபுக் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.  'பசங்க-2' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக பாண்டிராஜ் மற்றும் சூர்யா ஒன்றாக இணைந்துள்ளனர்.  சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். 

மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்,பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். சூர்யாவின் கடைசி இரண்டு படங்களான சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இருப்பினும் சூர்யா ரசிகர்களுக்கு படத்தை திரையரங்கில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. இதனை போக்கும் விதமாக எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டர்களில் நாளை வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது. 

கடலூர் மாவட்டத்தில் சூர்யா நடிப்பில் நாளை வெளியாகயுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கடலூரில் வெளியாகுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்தநிலையில், பாமகவை சேர்ந்த அருள்ரத்தினம் என்பவர் தனது பேஸ்ஃபுக் பக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தை விளம்பரம் ஆகிவிடக் கூடாது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு : 

எச்சரிக்கை: "போராட்டம் வேண்டாம்; புறக்கணிப்பு போதும்!"

நமது போராட்டம், எதிரிகளுக்கான விளம்பரம் ஆகிவிடக் கூடாது. நல்ல விளம்பரம், கெட்ட விளம்பரம் என்பதெல்லாம் சினிமாவுக்கோ, அரசியலுக்கோ இல்லை. எல்லா விளம்பரங்களும் பயனளிக்கும் விளம்பரங்கள் தான்.

உண்மையில் நேரடி விளம்பரங்களை விட, மறைமுக விளம்பரங்கள் தான் அதிகம் பயனளிப்பவை ஆகும். விளம்பர மொழியில் இதனை Earned media என்று அழைக்கிறார்கள் (Earned media is publicity gained from methods other than paid advertising).

நடிகர் சூர்யாவின் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினால், அதனை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கி, படத்துக்கு இலவச விளம்பரமாக மாற்றுவார்கள். அதைத்தான் நமது எதிரிகள் எல்லோரும் விரும்புகிறார்கள்.

சூர்யா என்கிற நபர் வன்னியர் அடையாளத்தை இழிவு செய்த போது, அதனை வன்மையாக எதிர்த்தோம். கண்டனத்தை பதிவு செய்தோம். ஆனால், அதையே அவரது புதிய படத்துக்கும் செய்தால் - அது அந்தப் படத்துக்கான விளம்பரமாக மட்டுமே இருக்கும்.

"கோபத்தை வெளிப்படுத்த என்ன செய்யலாம்?"

1. முதலில் நீங்கள் இந்தப் படத்தை 'பணம் செலவிட்டு' பார்க்காதீர்கள். 

2. இந்தப் படத்துக்கு எதிராக போராட்டம் எதையும் நடத்தாதீர். அவ்வாறான போராட்டத்தில் பங்கேற்காதீர்.

3. முகநூல், டிவிட்டர், யூடியூப் போன்றவற்றில் இந்தப் படத்தைப் பற்றி எந்தக் கருத்தையும் பதிவு செய்யாதீர்.

4. பெரும்பாலும் வன்னியர்கள் அங்கம் வகிக்கும் வாட்ஸ்ஆப் குழுக்களில் - உங்கள் குடும்பம், உறவினர், நண்பர்கள் உள்ள வாட்ஸ்ஆப் குழுக்களில் - வன்னியர்களின் அக்னி கலசத்தை இழிவு செய்த நடிகர் சூர்யாவின் படத்தை பார்க்க வேண்டாம் என்று வலியுறுத்துங்கள்.

5. படம் வெளியான பின்னர் - சூர்யாவின் படம் மாபெரும் வெற்றி, பலகோடி வசூல், என்றெல்லாம் கட்டமைக்கப்படும் கட்டுக்கதை செய்திகளைக் கண்டுகொள்ளாதீர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத் குமார், விஜய் போன்றவர்கள் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் பலகோடி வசூல் செய்யும் ஆற்றலும் உள்ளவர்கள். ஆனால், நடிகர் சூர்யா ஒரு பெரிய மார்க்கெட் உள்ள நடிகர் அல்ல. அண்மைக் காலங்களில் அவரது படங்கள் எதுவும் பெரிதாக வெற்றிபெறவில்லை. 

எனவே, சூர்யா நடித்த படங்களை நாம் பார்க்காமல் புறக்கணிப்பதும், நமது நண்பர்கள், உறவினர்கள் அவரது படங்களை பார்க்காமல் புறக்கணிக்க செய்வதுமே சரியான, போதுமான எதிர்ப்பு ஆகும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Kia Sonet: ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Embed widget