Entertainment Headlines Sep 17: லியோ அப்டேட்.. கோவையில் ரஜினி... அசோக் செல்வன் - கீர்த்தி ரிசப்ஷன் ஃபோட்டோஸ்.. சினிமா செய்திகள் இன்று!
Entertainment Headlines Sep 17: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாகக் காணலாம்.
‘மேடையை அலறவிட்ட தமிழ் படங்கள்’ .. சைமா (SIIMA) விருதுகளை அள்ளிய பிரபலங்கள்..!
சைமா திரைப்பட விருதுகள் (SIIMA Awards 2023) வழங்கும் விழாவில் விருதுகளை பெற்ற தமிழ் சினிமா பிரபலங்கள் யார், யார் என்ற விவரத்தை காணலாம். இந்திய சினிமாவில் மாநில அரசு, மத்திய அரசு, திரைப்பட விழா என எத்தனையோ நிகழ்வுகளாக திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் சைமா திரைப்பட விருதுகள் (SIIMA Awards 2023) என தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா முக்கியமானது. மேலும் படிக்க
கொந்தளித்து பூட்டை போட்ட விஜய் ரசிகர்கள்....! அப்டேட்டையே அப்டேட்டாக கொடுத்த லியோ டீம்! 4 நாளும் சரவெடிதான்!
லியோ படத்தின் புதிய போஸ்டர்கள் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு தொடர்ந்து வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு லியோ படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்படும். மேலும் படிக்க
“சந்திரபாபு நாயுடுவை பார்க்க முடியாததற்கு காரணம் இதுதான்” - ரஜினிகாந்த் ஓபன் டாக்
தனது மகள் சௌந்தர்யாவின் குழந்தையின் பெயர் சூட்டு விழாவுக்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் இருந்து கோவை வந்தார். நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா - விசாகன் தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சௌந்தர்யாவின் கணவர் விசாகனின் சொந்த ஊரான கோவை, சூலூரில், இவர்களது குழந்தையின் மொட்டை, காதணி மற்றும் பெயர் சூட்டு விழா நடைபெற்றது. மேலும் படிக்க
லியோ படத்தில் கௌதம் மேனன் கேரக்டர் என்ன தெரியுமா? .. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!
நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் கேரக்டர் என்று ஒரு புகைப்படம் வெளியாகி இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி, சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் என பலர் நடித்துள்ளனர். படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீசாவதையொட்டி போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் படிக்க
"இனி யாராவது வாயை தொறப்பீங்க?" .. மனைவி கீர்த்தி பாண்டியன் குறித்த கிண்டலுக்கு அசோக் செல்வன் பதிலடி..!
தனது மனைவி கீர்த்தி பாண்டியன் குறித்து உருவகேலி செய்த இணையவாசிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் அசோக் செல்வன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அசோக் செல்வன். தொடர்ந்து தெகிடி, பீட்சா 2, கூட்டத்தில் ஒருவன், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல், ஓ மை கடவுளே,நித்தம் ஒரு வானம் ஆகிய படங்களில் நடித்த அவருக்கு நடப்பாண்டு வெளியான ‘போர் தொழில்’ படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மேலும் படிக்க
விஷாலை மட்டும் இல்ல விஜய்யை காப்பாற்றியதும் இவர்தான்... ஸ்டார்களின் லக்கி நடிகர் எஸ்.ஜே சூர்யா
எஸ்.ஜே சூர்யா விஷால் நடித்து வெளியாகி இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு விஷாலின் கம்பேக் படமாக மார்க் ஆண்டனி திரைப்படம் அமைந்திருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்றால் நடிகர் எ.ஜே சூர்யாவை சொல்லலாம் . மேலும் படிக்க