(Source: ECI/ABP News/ABP Majha)
Ashok Selvan: "இனி யாராவது வாயை தொறப்பீங்க?" .. மனைவி கீர்த்தி பாண்டியன் குறித்த கிண்டலுக்கு அசோக் செல்வன் பதிலடி..!
தனது மனைவி கீர்த்தி பாண்டியன் குறித்து உருவகேலி செய்த இணையவாசிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் அசோக் செல்வன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது மனைவி கீர்த்தி பாண்டியன் குறித்து உருவகேலி செய்த இணையவாசிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் அசோக் செல்வன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அசோக் செல்வன். தொடர்ந்து தெகிடி, பீட்சா 2, கூட்டத்தில் ஒருவன், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல், ஓ மை கடவுளே,நித்தம் ஒரு வானம் ஆகிய படங்களில் நடித்த அவருக்கு நடப்பாண்டு வெளியான ‘போர் தொழில்’ படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து ப்ளூ ஸ்டார், சபாநாயகன் உள்ளிட்ட படங்களில் அசோக் செல்வன் நடித்து வருகிறார்.
இதனிடையே பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தும்பா படம் மூலம் 2019 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து அன்பிற்கினியாள் படத்தில் வெளியான நிலையில் அடுத்ததாக கண்ணகி, ப்ளூ ஸ்டார் ஆகிய படங்கள் கீர்த்தி நடிப்பில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தான் ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
விமரிசையாக நடந்த காதல் திருமணம்
இருவரும் கடந்த ஒரு வருட காலமாக காதலித்து வந்தநிலையில், இந்த ஜோடி சமீபத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது அருண்பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலி அருகேயுள்ள இட்டேரி கிராமத்தில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில், பல பேரின் வெறுப்பையும் பெற்றது.
உருவக்கேலிக்குள்ளான கீர்த்தி பாண்டியன்
அதாவது, அசோக் செல்வன் போன்ற அழகான பையனுக்கு இப்படி ஒரு பெண் மனைவியா?, இதை விட பெட்டரா வேற பெண்ணை பார்த்திருக்கலாம் என சகட்டுமேனிக்கு கருத்துகள் வர ஆரம்பித்தன. அதிலும் பெண்கள் ஐடி-யில் இருந்து இத்தகைய கமெண்டுகள் வர ஆரம்பித்ததால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். கீர்த்தி பாண்டியனை கண்டபடி உருவக்கேலி செய்த நிலையில், சிலர் அவருக்கு ஆதரவாக கமெண்டுகளை பதிவிட்டனர்.
பதிலடி கொடுத்த அசோக் செல்வன்
இந்நிலையில் மனைவி கீர்த்தி பாண்டியனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட அசோக் செல்வன், ‘இந்த உலகின் மிகப்பெரிய பேரழகி உடன் நான்’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்காக அசோக் செல்வனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram