Entertainment Headlines May 10: அஜித் ரீல் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. வெளியான கேப்டன் மில்லர் அப்டேட்.. லேட்டஸ்ட் சினிமா செய்திகள்..!
Entertainment Headlines: சினிமாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.

- அஜித் ரீல் மகளுக்கு அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. ரசிகர்கள் அதிர்ச்சி
கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். தொடர்ந்து மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், தற்போது ஹீரோயினாக தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். படம் ஒன்றுக்காக இந்த போஸ்டர் பிரிண்ட் செய்யப்பட்டதாக தெரிய வந்ததை அடுத்து பரபரப்பு குறைந்தது. மேலும் படிக்க
- ஃபர்ஸ்ட் லுக், டீசர் குறித்த அறிவிப்பு...வெளியான கேப்டன் மில்லர் அப்டேட் ...தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் தனுஷ் சினிமாவில் அறிமுகமாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் அவர் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட்டை, அதன் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் வெளியீட்டுள்ளது. அதன்படி கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூன் மாதம் வருவதாகவும், படத்தின் டீசர் வரும் ஜூலை மாதம் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மேலும் படிக்க
- பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பிக்கு முன் ஜாமீன்! நிபந்தனை இதுதான்!
இந்து கடவுளை இழிவாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்.30ஆம் தேதி நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வில் 'மலக்குழி மரணம்' எனும் தலைப்பில் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநரும், கவிஞருமான விக்னேஸ்வரன் எனும் விடுதலை சிகப்பி கவிதை ஒன்றை வாசித்திருந்தார். அதில் இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தியதாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அளித்த புகார் அளித்திருந்தார். மேலும் படிக்க
- 'தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளம்’... தனுஷ் எண்ட்ரி கொடுத்து 21 வருஷங்களாச்சு..
தமிழ் சினிமாவுக்கு நடிகர் தனுஷ் அறிமுகமாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதுவரை 47 படங்களில் நடித்துள்ள தனுஷ் இரண்டு முறை தேசிய விருது வென்றுள்ளார். மேலும் நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் தனது திறமையை நிரூபித்தார். மேலும் படிக்க
- எதிர்ப்புகளைக் கடந்து 5 நாள்களில் வசூலை வாரிக்குவித்த தி கேரளா ஸ்டோரி! எவ்வளவு தெரியுமா?
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியா முழுவதும் 56.86 கோடிகள் வசூலித்துள்ளதாகவும் உலகம் முழுவதும் 66.80 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் வெளியானது முதல் சர்ச்சைகளை கிளப்பி நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளைப் பெற்று வந்த இந்த திரைப்படத்தை ஆவணப்பட இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கியுள்ளார். சித்தி இத்னானி, அடா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் படிக்க





















