மேலும் அறிய

Captain Miller Update: ஃபர்ஸ்ட் லுக், டீசர் குறித்த அறிவிப்பு...வெளியான கேப்டன் மில்லர் அப்டேட் ...தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!

தனுஷ் ரசிகர்களை மேலும் உற்சாகமூட்டும் வகையில், கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்ததை அவரது ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில், தனுஷ் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும் வகையில் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

ராக்கி, சாணி காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.

மேலும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில்  தொடரி, மாறன், பட்டாஸ்,  படங்களைத் தொடர்ந்து  4வது முறையாக  தனுஷ் நடிக்கிறார்.  பிரியங்கா மோகன் தனுஷுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிக்கும் நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் வரிசையில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்து வரும் நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. 

இதனிடையே தனுஷ் திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்ததை தனுஷ் ரசிகர்கள் இன்று கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் தனுஷ் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும்  வகையில் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூன் மாதம் வருவதாகவும், படத்தின் டீசர் வரும் ஜூலை மாதம் வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை வெளியாகி 21 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகவும், பன்மொழிக் கலைஞராகவும் தனுஷ் உயர்ந்துள்ளார்.

இதனை தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில் அவர்களை மேலும் உற்சாகமூட்டும் வகையில் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வரலாற்றுப் பின்னணியிலும், 1930களின் மெட்ராஸ் ப்ரெசிடென்சியை மையமாகக் கொண்டும் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. 

கேப்டன் மில்லர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தென்காசி மாவட்டப் பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், மத்தளம்பாறை கிராமத்துக்கு அருகேயும் முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு அருகேயும் முறையான அனுமதியின்றி நடைபெற்று வந்ததாகக் கூறப்பட்டது.

மேலும் முறையான அனுமதியின்றி குண்டு வெடிப்பு காட்சிகள் உள்ளிட்டவை இங்கு படமாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இங்கு படப்பிடிப்பை நிறுத்த தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்தரன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து படக்குழுவினர் அனுமதி பெற்று சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்த பின் மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது.

மேலும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நீர்நிலைகளை ஆக்கிரமித்து நடத்தப்பட்டதாகவும் முன்னதாகத் தகவல் வெளியான நிலையில், இது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
ரஜினி பிறந்தநாளை இப்படிதான் கொண்டாடப் போகிறேன்...நடிகை ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
ரஜினி பிறந்தநாளை இப்படிதான் கொண்டாடப் போகிறேன்...நடிகை ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கணவன் – மனைவியாக இணையும் மைக் மோகன், சுஹாசினி!
43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கணவன் – மனைவியாக இணையும் மைக் மோகன், சுஹாசினி!
தமிழ் ராப் கலைஞர்களுக்குப் புதிய மேடை – ‘தீக்குரல்’ அறிவித்த ZEE5!
தமிழ் ராப் கலைஞர்களுக்குப் புதிய மேடை – ‘தீக்குரல்’ அறிவித்த ZEE5!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?
Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!
Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
விஜய் ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சியா? - எல். முருகன் சொன்னது என்ன?
விஜய் ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சியா? - எல். முருகன் சொன்னது என்ன?
Embed widget