மேலும் அறிய

Entertainment Headlines June 14: சுஷாந்தை மறக்காத ரசிகர்கள்... ட்ரெண்டிங்கில் மாவீரன் பாடல், மிருணாள்.. இன்றைய டாப் சினிமா செய்திகள்!

Entertainment Headlines: சினிமா உலகில் இன்று நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.

சிவகார்த்திகேயன் - அதிதி சங்கர் குரல்களில் ரகளையான டூயட்... மாவீரன் இரண்டாவது பாடல் ரிலீஸ்!

மாவீரன் படத்தின்  ’வண்ணாரப்பேட்டையில..’ பாடல் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் ஜோடி முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாவீரன். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் பாரதி சங்கர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடலான ‘வண்ணாரப்பேட்டையில..’ எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

‘அனைத்துத் துறைகளிலும் பாலியல் தொல்லை’ - நடிகை பிரியா பவானி ஷங்கர் அதிர்ச்சி தகவல்

அனைத்துத் துறைகளிலும் பாலியல் தொல்லை இருப்பதாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். மக்கள் மத்தியில் செய்தி வாசிப்பாளராக  அறிமுகமான நடிகை பிரியா பவானி ஷங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வைபவ் நடித்த மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அவரின் ஹோம்லி லுக் பிளஸ் பாய்ண்ட் ஆக அமைந்தது. மேலும் படிக்க

இராவணன் கதாபாத்திரத்துக்கு நோ சொன்ன ‘ராக்கி பாய்’ யஷ்... இது தான் காரணமாம்!

ரன்பீர் கபூர் - அலியா பட் நடிக்க இருக்கும் ராமாயனத்தை மையப்படுத்திய திரைப்படத்தில் ராவணனாக தான் நடிக்கவில்லை என கே.ஜி.எஃப் ஹீரோ யஷ் தெரிவித்துள்ளார். டங்கல் திரைப்படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி, அடுத்ததாக இந்திய புராணக்கதையான ராமாயணத்தை மையப்படுத்திய திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். ரன்பீர் கபூர் ராமனாகவும் ஆலியா பட் சீதையாகவும் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார்கள். மேலும் படிக்க

’விஜய் படத்தைப் பார்த்து தான் வளர்ந்தேன்’ ... நேர்காணலில் க்யூட்டாக சொன்ன கனடா நடிகை..!

தமிழ் படங்களைப் பார்த்து தான் நடிக்க ஆசைப்பட்டதாக பிரபல கன்னட நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இலங்கை தமிழர்களாக இருந்து அகதிகளாக கனடாவில் குடியேறிய பெற்றோருக்கு பிறந்தவர் மைத்ரேயி ராமகிருஷ்ணன், ஒன்டாரியோவில் உள்ள மிசிசாகாவில் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி பிறந்தார். இவர் அமெரிக்க காமெடி டிராமாவான Never Have I Ever என்ற வெப் சீரிஸில் தேவி விஸ்வகுமார் என்ற பெயரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் படிக்க

நடிகர் சுஷாந்த் சிங் 3ஆம் ஆண்டு நினைவு நாள்... 'கருப்பு தினம்' என ரசிகர்கள் உருக்கம்!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது 34ஆவது வயதில் தற்கொலை செய்து கொண்டார். இன்று அவரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள். ஜூன் 14, 2020ஆம் ஆண்டு மும்பையின் புறநகர் பாந்த்ராவில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சுஷாந்த் காணப்பட்டார். இந்நிலையில்,  சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் படிக்க

அர்ஜுன் ரெட்டியுடன் இணையும் சீதா மகாலட்சுமி.. விஜய் தேவரகொண்டாவின் அடுத்த பட அப்டேட்

குஷி படத்தில் சமந்தாவைத் தொடர்ந்து அடுத்ததாக ம்ருணால் தாக்கூருடன் இணைய இருக்கிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா. கீதா கோவிந்தம் படத்தின் இயக்குநர் பரசுராம் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சீதாராமம் படத்தில் நடித்த ம்ருணால் தாகூர் நடிக்க இருக்கிறார். தயாரிப்பாளர் தில்ராஜு இந்தப் படத்தை தயாரிக்கிறார். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?Airtel Employee: “இந்தியில் தான் பேசுவேன்” வாக்குவாதம் செய்த ஏர்டெல் ஊழியர்! வெடித்த மொழி பிரச்சனைCar Accident CCTV: மின்னல் வேகம்.. பேருந்தில் சிக்கிய கார்! வெளியான சிசிடிவி காட்சி | salem

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்!  திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்! திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
Embed widget