Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
ராகுல் இல்லாத சமயத்தில் ரூபியைக் காண இரண்டு பேர் வருவார்கள் என்றும், அவர்களுக்கிடையே தகாத உறவு இருந்ததும் கண்டறியப்பட்டது. இதன் பின்னர் ரூபியிடம் விசாரணை மேற்கொள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை மனைவி துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ராஜ்புரா காவல் நிலையப் பகுதியில் உள்ள கஸ்பா கன்வாவில் ராகுல் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கும் சந்தௌசியின் மொஹல்லா சன்னி பகுதியைச் சேர்ந்த ரூபி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் மகனும், 10 வயதில் மகனும் உள்ளனர்.
கால்வாயில் கிடந்த இளைஞர் உடல்
இப்படியான நிலையில் கடந்த டிசம்பர் 15ம் தேதி காலை 9 மணியளவில் பத்ராவா மாவட்டத்தில் உள்ள இட்கா என்ற பகுதியின் அருகில் உள்ள கால்வாயில் ஒரு இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது. நாய்கள் அந்த உடலை கடித்து குதறி கொண்டிருந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் வந்து உடலை கைப்பற்றியபோது அது அழுகி போயிருந்தது. 5 நாட்களாக அந்த உடலைக் கேட்டு யாரும் வராததால் இறந்தது யார் என தெரியாமல் போலீசார் குழம்பி போயினர்.
இந்த நிலையில் அந்த இளைஞரின் கையில் ராகுல் என பச்சை குத்தப்பட்டிருந்தது. அதைக் கொண்டு விசாரித்ததில் அவர் நவம்பர் 18ம் தேதி முதல் காணாமல் போனது கண்டறியப்பட்டது. அவரது மனைவியான ரூபி சந்தௌசி காவல் நிலையத்தில் புகார் அளித்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை
முதலில் ராகுல், ரூபி குடும்பத்தினர், அவர்கள் குழந்தைகள், ஊர் மக்களிடம் விசாரணை நடைபெற்றது. இதில் ராகுல் இல்லாத சமயத்தில் ரூபியைக் காண இரண்டு பேர் வருவார்கள் என்றும், அவர்களுக்கிடையே தகாத உறவு இருந்ததும் கண்டறியப்பட்டது. இதன் பின்னர் ரூபியிடம் விசாரணை மேற்கொள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர்.
அங்கு இரும்பு கம்பி, படுக்கை மற்றும் ஹீட்டரில் உலர்ந்த இரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டனர். இதனையடுத்து ரூபியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் தன் ஆண் நண்பர்களான கௌசிக், அபிஷேக் ஆகியோருடன் சேர்ந்து ராகுலை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். பின்னர் அவர்கள் இருவர் உட்பட 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மூன்று பேரையும் தனித்தனியாக விசாரித்ததில் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்லியுள்ளனர்.
நேருக்கு நேர் வைத்து விசாரித்தபோது உண்மை வெளிப்பட்டது. அதாவது நவம்பர் 18 ஆம் தேதி இரவு தனது காதலர்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து, தூங்கிக் கொண்டிருந்த தனது கணவரை ரூபி கொலை செய்துள்ளார். அதன் பிறகு, உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். அவற்றை வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனர். சில உடல் பாகங்களை மிக்ஸி, கிரைண்டர் கொண்டு அரைத்து பாலீத்தின் கவரில் போட்டுள்ளனர் என விசாரணையில் தெரிய வந்தது.
ஒரு கட்டத்தில் தான் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில், நவம்பர் 24 ஆம் தேதி காணாமல் போனதாக ரூபி போலீசில் புகார் அளித்திருக்கிறார். குழந்தையும் அம்மாவின் கள்ளக்காதல் விவகாரத்தை உறுதிப்படுத்தியதால் இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் எளிதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.





















