மேலும் அறிய

Yash: இராவணன் கதாபாத்திரத்துக்கு நோ சொன்ன ‘ராக்கி பாய்’ யஷ்... இது தான் காரணமாம்!

கே.ஜி.எஃப் படத்தின் இரண்டு பாகங்களின் மாபெரும் வெற்றிகளைத் தொடந்து நடிகர் யஷ் நடிக்கும் அடுத்தப் படத்திற்காக மிக ஆர்வமாக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

ரன்பீர் கபூர் - அலியா பட் நடிக்க இருக்கும் ராமாயனத்தை மையப்படுத்திய திரைப்படத்தில் ராவணனாக தான் நடிக்கவில்லை என கே.ஜி.எஃப் ஹீரோ யஷ் தெரிவித்துள்ளார்.

டங்கல் திரைப்படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி, அடுத்ததாக இந்திய புராணக்கதையான ராமாயணத்தை மையப்படுத்திய திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். ரன்பீர் கபூர் ராமனாகவும் ஆலியா பட் சீதையாகவும் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார்கள். முன்னதாக சீதை கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஆலியா பட் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

ராவணனாக யஷ்

 ராவணன் கதாபாத்திரத்தில் நடிப்பது யார் என வெகு நாட்களாக படக்குழு விவாதம் செய்து வந்த நிலையில் , கே.ஜி.எஃப் திரைப்படத்தில் நடித்த யஷ் இந்தப் படத்தில் ராவணனாக நடிக்க இருக்கிறார் என்கிற சுவாரஸ்யத் தகவல் அண்மையில் வெளியாகியிருந்தது. விரைவில் யஷ் படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, தான் இந்த படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார் நடிகர் யஷ்.

கே.ஜி.எஃப் படத்தின் இரண்டு பாகங்களின் மாபெரும் வெற்றிகளைத் தொடந்து நடிகர் யஷ் நடிக்கும் அடுத்தப் படத்திற்காக மிக ஆர்வமாக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். அதனால் நடிகர் யஷ் தான் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களில் அதிக கவனம் எடுத்துகொள்கிறார். கே.ஜி.எஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து நிறைய  படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அமைந்தும் தனக்கு ஏற்ற கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறார் யஷ். தனது ரசிகர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையிலான கதைகளையே தேர்வு செய்யவேண்டும் என உறுதியாக இருக்கும் யஷ், கதாநாயகனாக உருவாகிவரும் இந்த சமயத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது தனது ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கக் கூடியதாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நிதேஷ் திவாரி

தங்கல் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி புகழ்பெற்றவர் நிதேஷ் திவாரி. தங்கல் திரைப்படத்தில் வெற்றிக்குப் பிறகு பல்வேறு பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்க இவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன. ஆனால் அவற்றை எல்லாம் மறுத்து நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மற்றும் ஷ்ரத்தா கபூரை வைத்து சிச்சோரே என்கிறப் படத்தை இயக்கினார் நிதேஷ்.

தற்போது வருண் தவான் மற்றும் ஜான்வி கபூர் ஆகியவர்கள் நடிக்கும் பவால் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படங்களின் வேலைகளை முடித்த பின்னர் ராமாயணத்தை மையமாக வைத்து தனது கனவுப் படத்தை இயக்கத் திட்டமிட்டிருக்கிறார் நிதேஷ் திவாரி.

 

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Embed widget