Entertainment Headlines July 6th: கார்த்தி வேண்டுகோள்.. இளம் நடிகை புகார்...மாமன்னன் கலெக்ஷன்..! சினிமா ரவுண்ட் அப்..!
Entertainment Headlines Today July 6th: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.
Actor Karthi: 'குடும்பத்துடன் வேளாண் வர்த்தக திருவிழாவுக்கு வாங்க..' விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் கார்த்தி..!
வரும் ஜூலை 8, 9 ஆம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வேளாண் வர்த்தக திருவிழா ஒன்றை நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ள நிலையில், இது குறித்த தகவலை நடிகர் கார்த்தி பொதுமக்களுடன் பகிர்ந்துள்ளார்.“நூற்றுக்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர்கள், தங்களது பொருட்களை இந்த வேளாண் வர்த்தக திருவிழாவில் நேரடியாக விற்பனை செய்ய இருக்கின்றனர். அனைவரும் குடும்பத்துடன் இந்தத் திருவிழாவுக்கு வந்து வேளாண் மக்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
Infinity Movie Review: ‘இதுக்கு இல்லையா ஒரு எண்டு?’ ..பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்டியின் ‘இன்ஃபினிட்டி’ படம் எப்படி? - விமர்சனம் இதோ..!
இன்ஃபினிட்டி’ படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது நிச்சயம் ரசிகர்களுக்கு நல்ல இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படம் கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை அந்த எண்ணத்தை மாற்றியுள்ளது. இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் கதைகளில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதே வெற்றிக்கான காரணமாக இருக்கும். ஆனால் ‘இன்ஃபினிட்டி’ படம் ஏதோ அவசர அவசரமாக தயாரானது போல இருக்கிறது.
“என்னை நடிக்கக்கூடாதுன்னு என் தந்தை கொலை மிரட்டல் விடுக்கிறார்” - நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ
மலையாள நடிகையான அர்த்தனா பினு 2017ம் ஆண்டு சமுத்ரகனி நடிப்பில் வெளிவந்த தொண்டன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து செம்ம படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாகவும், கார்த்தி நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம், வெண்ணிலா கபடி குழு 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் அர்த்தனா பினு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது தந்தை மீது அவர் அளித்துள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் மலையாள திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
“என்னை நடிக்கக்கூடாதுன்னு என் தந்தை கொலை மிரட்டல் விடுக்கிறார்” - நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ
Maamannan Box Office Collection: சகட்டு மேனிக்கு சம்பாதிக்கும் மாமன்னன்... ஒரு வாரத்தைக் கடந்தும் பாக்ஸ் ஆஃபிஸில் மாஸ்!
பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் sacnilk தளத்தின் தகவல்களின்படி மாமன்னன் திரைப்படம் முதல் நாள் 8.5 கோடிகளும், இரண்டாம் நாள் 5.1 கோடிகளும், மூன்றாம் நாள் 7 கோடிகளும், நான்காம் நாள் 7.8 கோடிகளும், ஐந்தாம் நாள் 2.9 கோடிகளும், ஆறாம் நாள் 2.7 கோடிகளும், ஏழாம் நாள் தோராயமாக 2.23 கோடிகளும், எட்டாம் நாள் தோராயமாக 1.98 கோடிகளையும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Director Perarasu: “சினிமாவில் சாதி இல்லை; இளையராஜா காலில் வேறு சமூகத்தினர் விழவில்லையா?” - பேரரசு
பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய இயக்குனர் பேரரசு, ‘சினிமாவில் தாழ்த்தப்பட்டவன், உயர்ந்தவன் என யாரும் இல்லை. இசையில் உலகமே போற்றப்படுபவர், இசைஞானி என்று புகழப்படுபவரான இளையராஜாவின் காலில் உயர்ந்த சாதியை சேர்ந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் விழவில்லையா? படத்தில் வாய்ப்பு கேட்டு வரும் உதவி இயக்குனரிடம் ”நீ என்ன சாதி என கேட்கும் இயக்குனர்” மனித சாதியே இல்லை என்றார். தனக்கு முதன் முதலில் பட வாய்ப்பு கொடுத்து தன்னை இயக்குனராக மாற்றிய விஜய், தன்னிடம் கதையை மட்டும் தான் கேட்டாரே தவிர தனது சாதி மற்றும் மதத்தை கேட்கவில்லை’ என்றார்.
Director Perarasu: “சினிமாவில் சாதி இல்லை; இளையராஜா காலில் வேறு சமூகத்தினர் விழவில்லையா?” - பேரரசு