Entertainment Headlines July 10th: மாஸ் காட்டும் ஜவான் ட்ரெய்லர்... விஜய்யின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு... இன்றைய டாப் சினிமா செய்திகள்!
Entertainment Headlines Today July 10th: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.
தெறிக்கவிட்ட ஷாரூக்.. மிரட்டிய அட்லீ.. ரிலீசானது ஜவான் ட்ரெயிலர்..! நீங்களே பாருங்க..!
பாலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான். இவர் நடிப்பில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் அட்லீ இயக்கியுள்ள திரைப்படம் ஜவான். அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது முதலே பெரும் பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி என்று நட்சத்திர பட்டாளங்கள் குவிந்ததும், படத்தின் பர்ஸ்ட் லுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் படிக்க
உள்ளாடை சைஸ் கேட்ட நபர்: காட்டமாக பதிலை சொன்ன ப்ரியா பவானி சங்கர்!
தமிழ் சினிமாவில் தமிழ் நன்கு தெரிந்த நடிகைகளை விரைவில் வரிசைப் படுத்திவிடலாம். தமிழ் தெரிந்து இருந்தாலும் சிறப்பான கதையை தேர்வு செய்யாமல் போவதால் சிலர் சினிமாவில் சத்தமே இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் சினிமா வாழ்க்கையை சின்னத்திரையில் இருந்து தொடங்கி இன்று வரை சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருக்கும் நடிகை ப்ரியா பவானி சங்கர். மேலும் படிக்க
தங்கத்தட்டில் தரமான ஆக்ஷன் விருந்து... மிரள வைத்தாரா டாம் க்ரூஸ்? மிஷன் இம்பாசிபள் 7 விமர்சனம்!
மிஷன் இம்பாசிபிள் பட வரிசையில் ஏழாவது பாகம் மிஷன் இம்பாசிபள் – டெட் ரெக்கனிங் (பாகம் ஒன்று) (Mission Impossible Dead Reckoning - Part 1) . டாம் க்ரூஸ், ரெபெக்கா ஃபெர்குசன், ஹேய்லி ஆட்வெல், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். கிறிஸ்டோஃபர் மெக்கரீ, எரிக் ஜெண்டர்சன் திரைக்கதை எழுதி கிறிஸ்டோஃபெர் மெக்கரி இயக்கியிருக்கிறார். மேலும் படிக்க
சர்வதேச இசை நிகழ்ச்சியில் விஜய பிரபாகரன்.. சினிமாவில் சாதிப்பாரா விஜய்காந்த் மகன்?
உலக அளவில் மிகவும் பிரபலமான இசைக் கலைஞரை வைத்து பிரமாண்ட இசை நிகழ்ச்சியை விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் ஆக்ஷனில் அசத்தி முன்னடி நடிகராக வலம் வந்த விஜயகாந்த், தேமுதிக என்ற கட்சியை தொடங்கி, அரயலிலும் தனக்கான முத்திரையை பதித்தவர். தற்போது அவரது உடல்நிலை காரணமாக அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்து வருகிறார். மேலும் படிக்க
அடுத்தடுத்து விறுவிறுப்பு.. நாளை பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கும் விஜய்..!
மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலமாக நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போலவே அவரது செயல்பாடுகளும் அமைந்துள்ளது. மேலும் படிக்க
'விஜய் கட்சி தொடங்கினா, தொண்டரா இருப்பேன்’: வனிதா கொடுத்த அதிரடி ஸ்டேட்மெண்ட்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக தொண்டராக பயணிப்பேன் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வசந்தபாலன். இவரின் அடுத்தப் படைப்பாக ‘அநீதி’ படம் வரும் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் ஷங்கர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மேலும் படிக்க