Priya Bhavani Shankar: உள்ளாடை சைஸ் கேட்ட நபர்: காட்டமாக பதிலை சொன்ன ப்ரியா பவானி சங்கர்!
அநாகரிகமாக கேள்வி எழுப்ப்பிய ரசிகருக்கு நடிகை ப்ரியா பவானி சங்கர் காட்டமான பதில் அளித்துள்ளார்.
![Priya Bhavani Shankar: உள்ளாடை சைஸ் கேட்ட நபர்: காட்டமாக பதிலை சொன்ன ப்ரியா பவானி சங்கர்! Priya Bhavani Shankar angry on fans Question Instagram Meet Bra size Entertainment News Priya Bhavani Shankar: உள்ளாடை சைஸ் கேட்ட நபர்: காட்டமாக பதிலை சொன்ன ப்ரியா பவானி சங்கர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/10/61efd2fa6b97310a465f0c4cd46f86591688969200441102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் தமிழ் நன்கு தெரிந்த நடிகைகளை விரைவில் வரிசைப் படுத்திவிடலாம். தமிழ் தெரிந்து இருந்தாலும் சிறப்பான கதையை தேர்வு செய்யாமல் போவதால் சிலர் சினிமாவில் சத்தமே இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் சினிமா வாழ்க்கையை சின்னத்திரையில் இருந்து தொடங்கி இன்று வரை சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருக்கும் நடிகை ப்ரியா பவானி சங்கர்.
இவர் அண்மையில் தனது ரசிகர்களுக்காக நடத்திய இன்ஸ்டாகிராம் சந்திப்பில் ரசிகர் ஒருவர், அநாகரிகமாக அவரது உள்ளாடை சைஸ் குறித்து கேள்வி எழுப்பினார். இதனை சற்றும் எதிர்பாராத நடிகை ப்ரியா பவானி சங்கர், அதற்கு தக்க பதிலடியைக் கொடுத்துள்ளார். அதாவது அந்த கேள்விக்கு அவர் அளித்த பதில், “34டி தான் ப்ரோ, எனது மார்பகங்களை தான் வேற்று கிரகத்தில் இருந்து பெறவில்லை. உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் ஒரு ஜோடி மார்பகங்கள் உண்டு, அதனை ஜூம் செய்து பார்த்தால் அதன் சைஸ் தெரியும். அதற்கு வாழ்த்துக்கள் என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தான் அறிமுகமான மேயாத மான் தொடங்கி பெரும்பாலும் குடும்பப்பாங்கான காதாப்பாத்திரங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். மேலும், படத்தில் தனது கதாப்பாத்திரத்திற்கு முக்கிய இடம் இருந்தால் மட்டும் தான் கதையை ஓ.கே. செய்து வருபவர். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் மட்டும் கொஞ்சம் க்ளாமராக நடித்து இருப்பார். க்ளாமராக நடித்த காட்சிகள் ரசிகர்கள் முகம் சுழிக்கும் வகையில் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இவரது இந்த மாற்றத்திற்கு காரணம், குடும்பபபாங்கான கதை மட்டும் இல்லாமல், கதைக்கு தேவைப்படும் க்ளாமரிலும் கலக்கி வருவதால் தான் நயந்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக உள்ளார். நயந்தாரா இவருக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவராம். அதனால் தான் அவரது பாணியை பின்பற்றி சினிமாவில் உச்சம் தொடவும் நீண்ட காலம் நீடிக்கவும் இரண்டு வகையான கதாப்பாத்திரத்தையும் சரியான முறையில் கையாளவேண்டும் என தீர்க்கமான முடிவில் இருக்கிறாராம் ப்ரியா.
அதனால் தான் அதற்கு ஏற்றவகையில் ஃபோட்டோ சூட்களை நடத்தி தனது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டு தனது ரசிகர்களை தயார் படுத்திவருகிறாராம். இவரது நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே, பத்து தல, பொம்பை, ருத்ரன், அகிலன் ஆகிய படங்கள் இந்த ஆண்டில் இதுவரை வெளியாகியுள்ளது. மேலும், இந்தியன் 2 மற்றும் டிமாண்டி காலணி ஆகியவை வெளியாகவுள்ளன. இது தவிர இன்னும் பெயர் வைக்கப்படாத படங்களிலும் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)