மேலும் அறிய

Vijaya Prabhakaran : சர்வதேச இசை நிகழ்ச்சியில் விஜய பிரபாகரன்.. சினிமாவில் சாதிப்பாரா விஜய்காந்த் மகன்?

உலக அளவில் மிகவும் பிரபலமான இசைக் கலைஞரை வைத்து பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்

உலக அளவில் மிகவும் பிரபலமான இசைக் கலைஞரை வைத்து பிரமாண்ட இசை நிகழ்ச்சியை விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் ஆக்‌ஷனில் அசத்தி முன்னடி நடிகராக வலம் வந்த விஜயகாந்த், தேமுதிக என்ற கட்சியை தொடங்கி, அரயலிலும் தனக்கான முத்திரையை பதித்தவர். தற்போது அவரது உடல்நிலை காரணமாக அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு பதிலாக அரசியல் மற்றும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், மதுரை வீரன் உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது தலைமையில் உலக புகழ் பெற்ற இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிராமி மற்றும் எம்மி விருதுகளை பெற்று இசையுலகில் தனக்கு என தனி இடத்தை பிடித்தவர் கர்டிஸ் ஜாக்சன் என்ற 50 சென்ட். அமெரிக்கரான இவர் ராப் பாடல்கள் மற்றும் ஆல்பன் பாடல்களை வெளியிட்டு இசையில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருப்பவர். இந்த நிலையில் இந்தியாவில் நவம்பர் மாதம் நடைபெறும் உலகளாவிய இசைக்கச்சேரியில் 50 சென்ட் பங்கேற்கிறார். மும்பையில்,  "The Final Lap Tour 2023" என்ற பெயரில் சர்வதேச இசை விழா நடைபெற உள்ளது. அதில்,  "Get Rich or Die Tryin" என்ற தனது 20 வது ஆல்பத்தை  50 சென்ட் வெளியிடுகிறார். 

நேரடி பொழுதுபோக்கு, திரைப்பட தயாரிப்பு மற்றும் கலைஞர்கள் ஒருங்கிணைப்பு துறையில் ஒரு அங்கமாக இருக்கும் விஜய பிரபாகரனின் வி.ஜெ.பி. (VJP) என்ற நிறுவனமும், டராக்டிகல் (Tracktical) கான்சர்ட்ஸ் என்ற முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமும் இணைந்து இசை விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளன. அதில், 50 சென்ட்டின் வாழ்க்கை வரலாறு, பிரபல பாடல்கள் மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் பாடல்கள் வெளியிட  உள்ளன. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு ராப் உள்ளிட்ட பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளனர்.

தன்னிகரற்ற பாடல் வரிகளை எழுதுவதில் புகழ்பெற்ற 50 சென்ட், முதன் முதலில் வெளியிட்ட "Get Rich or Die Tryin" என்ற ஆல்பல் பட்டிதொட்டி எங்கும் சென்றடைந்து, இசை உலகில் நீங்கா இடம் பிடித்தது. இந்த ஆல்பம் அவருக்கு சர்வதேச அளவில் புகழையும் தேடி தந்தது. இந்த ஆல்பத்தில் உள்ள "In da club," "p.i.m.p," மற்றும் "candy shop" போன்ற பாடல்கள் கலாச்சார புரிதலையும், ஆழமான கதையையும் கொண்டதாக ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். 

இந்தியாவில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து பேசிய 50 சென்ட், தனது இந்திய பயணம் அன்பால் நிறைந்து இருப்பதாகவும், 16 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தது குறித்து பகிர்ந்து கொண்டார்.  தனது தலைமையில் நடைபெறும் இசை நிகழ்ச்சி குறித்து பேசிய விஜய பிரபாகரன், திரை மற்றும் கலை உலகில் தனது தந்தையான விஜயகாந்த்துக்கு தனி அடையாளம் இருப்பதாகவும், அதை முன் எடுத்துச் செல்லும் வழியில் தனது முயற்சி இருப்பதாகவும், கலை துறையில் மாறுபட்ட தொடக்கத்தை செயல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget