Entertainment Headlines Aug 26: வேகமெடுக்கும் விஜய் மக்கள் இயக்கம்.. ஜெய் பீமுக்கு நியாயம் கேட்டு குவியும் ட்வீட்.. இன்றைய சினிமா செய்திகள்!
Entertainment Headlines Aug 26: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.
காதலும் ஒரு போர் தான்... ‘குட் நைட்’ மணிகண்டனின் அடுத்த பட அப்டேட்.. கலக்கல் புகைப்படங்கள்!
காதலும் கடந்து போகும், காலா, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஏலே, ஜெய் பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மணிகண்டன். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் நைட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மணிகண்டன் அறிமுக இயக்குனர் பிரபுராம் இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். மேலும் படிக்க
அடுத்த கட்டத்துக்கு தயாராக வேண்டியிருக்கலாம்: விஜய்யின் அரசியல் வருகையை உறுதி செய்தாரா புஸ்ஸி ஆனந்த்?
சென்னை பனையூரில் இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான விஜய் மக்கள் இயக்க தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள தொகுதிவாரியாக நபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் படிக்க
சிவனும் சக்தியும் சேந்தா மாஸுதான்... சென்னையில் ஜவான் இசை வெளியீட்டு விழா... ஷாருக்கானுக்காக விஜய் வர்றாரா?
ஜவான் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா (Jawan Audio Launch) சென்னையில் நடைபெறவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோலிவுட் டூ பாலிவுட் பெரும் படையுடன் காலடி எடுத்து வைக்கும் இயக்குநர் அட்லீ, தன் முதல் படத்தையே பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து எடுத்து இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். மேலும் நடிகை நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் முதன்முதலாக அட்லீ உடன் பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் படிக்க
தியேட்டரில் குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’... ஓடிடியில் காண ரெடியாகுங்க!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்து அமர்களப்படுத்திய நடிகர்களில் ஒருவர் நடிகர் சந்தானம். தனக்கென ஒரு தனி காமெடி ஸ்டைலை உருவாக்கி கலக்கி ஏராளமான ரசிகர்களைப் பெற்று ,இன்று ஹீரோவாக தனது பயணத்தை வெற்றிகரமாக நகர்த்தி வருகிறார் சந்தானம். அந்த வகையில் அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த ஜூலை 28ம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. மேலும் படிக்க
காந்தியைக் கொன்றவர்கள் எப்படி விருது தருவார்கள்.. ஜெய் பீம் படத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் கடும் தாக்கு!
2021 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் திரைப்படங்களுக்காக 69ஆவது தேசிய விருதுகள் நேற்று முன் தினம் (ஆக.24) அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவின் ‘கடைசி விவசாயி’ படத்துக்கு இரண்டு விருதுகள், ‘இரவின் நிழல்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயவா தூயவா’ பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருதும், கருவறை ஆவணப்படத்துக்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் படிக்க