Breaking News LIVE:டங்ஸ்டன் சுரங்க விவகாரம்; பா.ஜ.க.வை கண்டித்தாரா எடப்பாடி பழனிச்சாமி? முதல்வர் கேள்வி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

Background
டங்ஸ்டன் சுரங்க விவகாரம்; பா.ஜ.க.வை கண்டித்தாரா எடப்பாடி பழனிச்சாமி? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி பா.ஜ.க.வை கண்டித்தாரா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் தொடங்கியது தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்
மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
தமிழ்நாட்டில் கொட்டப்பட்டுள்ள கேரள கழிவுளை அகற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கேரள அதிகாரிகள் தமிழ்நாடு வந்தனர்.
சென்னைபள்ளிக்கரணையில் விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு
சென்னை பள்ளிக்கரணையில் சாலை தடுப்பில் இரு சக்கர வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

