மேலும் அறிய

DD returns OTT Release: தியேட்டரில் குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’... ஓடிடியில் காண ரெடியாகுங்க!

DD Returns on OTT: சந்தானம் - சுரபி நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்து அமர்களப்படுத்திய நடிகர்களில் ஒருவர் நடிகர் சந்தானம். தனக்கென ஒரு தனி காமெடி ஸ்டைலை உருவாக்கி கலக்கி ஏராளமான ரசிகர்களைப் பெற்று ,இன்று ஹீரோவாக தனது பயணத்தை வெற்றிகரமாக நகர்த்தி வருகிறார் சந்தானம். 

அந்த வகையில் அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த ஜூலை 28ம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. சந்தானம் ஜோடியாக நடிகை சுரபி நடித்திருந்தார். மேலும் பெப்சி விஜயன், மாறன், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், தீபா என ஒட்டுமொத்த காமெடி டீமும் இப்படத்தில் நடித்திருந்தனர். வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றது. பாக்ஸ் ஆபிசில் சுமார் 20 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

DD returns OTT Release: தியேட்டரில் குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’... ஓடிடியில் காண ரெடியாகுங்க!

நல்ல கம் பேக்:

சமீப காலமாக சந்தானம் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் கவனம் பெறாததால் துவண்டு போன சந்தானத்திற்கு ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஒரு நல்ல கம் பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படம் ஒரு பக்கம் பட்டையைக் கிளப்பி வந்தாலும் சைலெண்டாக ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படமும் ஒரு பக்கம் திரையரங்குகளில் ஓடி இந்த வசூலை ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஓடிடியில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’:

‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாத காலம் முடிவு பெறும் நிலையில் அதன் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வெளியாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

திரையரங்குகளில் வெற்றி நடை போட்ட ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இனி திரை ரசிகர்கள் ஓடிடியிலும் பார்த்து ரசிக்க முடியும். இப்படம் சந்தானத்திற்கு ஒரு பிரேக் கொடுத்துள்ளதால் இனி அவரின் மார்க்கெட்டும் எகிறிவிடும் என்ற பேச்சுக்கள் சினிமா வட்டாரத்துக்குள் அடிபடுகின்றன. 

விரைவில் வெளியாகும் 'கிக்' :

ஃபார்ச்சூன் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் நவீன்ராஜ் தயாரிப்பில் கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் 'கிக்'. தான்யா ஹோப் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் தம்பி ராமையா, மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், Y.G.மகேந்திரன், ஷகிலா, செந்தில், மனோபாலா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முழுநீள காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தானம் ரசிகர்கள் இப்படத்தின் ரிலீசுக்காக பல மாதங்களாக காத்துகொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
Pulsar 150 Vs Apache RTR 160: பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
JSW New SUV: ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Embed widget