Entertainment Headlines Aug 22: வெளியானது சந்திரமுகி-2 இரண்டாவது பாடல், புதிய கான்செப்டுடன் பிக்பாஸ் - இன்றைய டாப் சினிமா செய்திகள்!
Entertainment Headlines Aug 22: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.
Entertainment Headlines Aug 22:
சந்திரமுகி 2 - 2வது பாடல் வெளியாகியுள்ளது
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தில் இருந்து 2வது பாடல் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. சந்திரமுகி 2 படத்தில் இருந்து மொருனியே என்னும் பாடல் வெளியாகியுள்ளது. நேற்று இதற்கான ப்ரோமோ வெளியான நிலையில் மிக வித்தியாசமாக இப்பாடல் உருவாகியிருப்பதாக அதனைப் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த மொருனியே பாடலை கேட்கும் போது ஆர்.ஆர்.ஆர். பாடல் தான் நியாபகம் வருவதாக இணையவாசிகள் தெரிவித்து உள்ளனர். எஸ்.பி.பி. சரண் மற்றும் ஹரிகா நாராயண் பாடியுள்ள இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார்.மேலும் வாசிக்க.
திறமையாளர்களுக்கு தொடர்ந்து ஏற்றம் தரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர்மேலும் வாசிக்க..
6 படங்கள் ரஜினிக்கு தோல்வி.. வரலாறு தெரியாமல் பேசுகிறாரா விஜய் தேவரகொண்டா?
சினிமாவில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் தான் என்றும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே 6 படங்கள் அடுத்தடுத்து தோல்வி கொடுத்த பிறகு ஜெயிலர் படம் வெற்றி பெற்றுள்ளது என நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் சிவா நிர்வானா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை சமந்தா நடித்துள்ள படம் குஷி. செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவையில் நேற்று நடிகர் விஜய் தேவரகொண்டா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் முந்தைய சில படங்கள் தோல்வி அடைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் வாசிக்க..
ஜெய்பீம் படத்தால் புது சிக்கல்...
குறவர் சமூகத்தினரை இழிவுப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் சூர்யா பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகேசன் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் மீதான விசாரணை படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் சூர்யாவையும், இயக்குநர் ஞானவேலையும் எதிர்மனுதாரராக சேர்த்த நீதிமன்றம், மனு தொடர்பாக இருவரையும் பதிலளிக்க உத்தரவிட்டது. இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி கூறிய நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார். மேலும் வாசிக்க.
இதுதாங்க சரியான ட்விஸ்ட்...
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி துவங்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் விஜய் டிவியில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை. கடந்த ஆறு சீசன்களாக இல்லாத ஒரு ட்விஸ்ட் ஒன்று இந்த சீசனில் இருக்கப்போவதாக கூறப்படுகிறது.அதாவது இந்த முறை ஒரு பிக் பாஸ் வீடு அல்ல இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருக்கப்போகின்றன என்று கூறப்படுகிறது. ஒரு பிக் பாஸ் வீடு அனைத்து வசதிகளும் கொண்டது என்றும் மற்றுமொரு பிக் பாஸ் வீட்டில் வசதி எதுவும் இல்லாமல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்கள் அந்த வசதியில்லாத பிக் பாஸ் வீட்டில் தங்க வைக்கப்படுவார்கள் மேலும் வாசிக்க..
மன்னனா, நாடோடியா? தீர்ப்பை மக்களிடம் கொடுத்த எம்.ஜி.ஆர்...
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன் என கொண்டாடப்படும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் புகழின் உச்சியில் கொண்டாடப்பட்ட நேரத்தில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்ற புதிய பரிணாமத்தை அடையாளமாக்கியது 1958ம் ஆண்டு வெளியான 'நாடோடி மன்னன்' திரைப்படம். மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த இப்படம் வெளியாகி இன்றுடன் 65 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.மேலும் வாசிக்க..
26 ஆண்டுகளை நிறைவு செய்யும் ‘ராமன் அப்துல்லா’..!
பாலு மகேந்திராவின் அற்புதமான படைப்புகளில் ஒன்றான ‘ராமன் அப்துல்லா’ படம் வெளியாகி இன்றோடு 26 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. பாக்ஸ் ஆபீஸில் ராமன் அப்துல்லா படம் தோல்வியடைந்தாலும், ரசிகர்கள் மனதில் என்றும் ஒரு மறக்க முடியாத படமாக அமைந்து விட்டது என்றே சொல்லலாம்.மேலும் வாசிக்க..