Bigg Boss 7 Tamil: இதுதாங்க சரியான ட்விஸ்ட்... புதிய கான்செப்டுடன் பிக்பாஸ் சீசன் 7... வெளியான சர்ப்ரைஸ் தகவல்
Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்படும் புதிய ட்விஸ்ட் என்ன தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பானது. கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அசீமும் இரண்டாவது இடத்தை விக்ரமனும் கைப்பற்றினர்.
வெளியான ப்ரோமோ வீடியோ | Bigg Boss 7 Tamil Promo
கடந்த ஆறு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் உலகநாயகன் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளார். அதற்கான ப்ரோமோ வீடியோ சில தினங்களுக்கு முன்னர்தான் வெளியானது. வெளியானதில் இருந்து நல்ல வரவேற்பை பெற்றதோடு ரசிகர்களின் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. தற்போது நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் தேர்வு மும்மரமாக நடைபெற்று வருகிறது.
சும்மாவே வீடு ரெண்டாகும்.. இப்ப வீடே ரெண்டாயிடுச்சு.. 🏠🏠 இன்னும் என்னென்ன ஆகுமோ.. 😀😎
— Vijay Television (@vijaytelevision) August 25, 2023
Bigg Boss Tamil.. Season 7.. விரைவில்.. 😎 | @ikamalhaasan @disneyplusHSTam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/WecCG2tJni
புதிய ட்விஸ்டுடன் பிக் பாஸ் சீசன் 7:
பிக்பாஸ் சீசன் 7(Bigg Boss Season 7) நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி துவங்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் விஜய் டிவியில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை. கடந்த ஆறு சீசன்களாக இல்லாத ஒரு ட்விஸ்ட் ஒன்று இந்த சீசனில் இருக்கப்போவதாக கூறப்படுகிறது.
இரண்டு வீடா?
அதாவது இந்த முறை ஒரு பிக் பாஸ் வீடு அல்ல இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருக்கப்போகின்றன என்று கூறப்படுகிறது. ஒரு பிக் பாஸ் வீடு அனைத்து வசதிகளும் கொண்டது என்றும் மற்றுமொரு பிக் பாஸ் வீட்டில் வசதி எதுவும் இல்லாமல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்கள் அந்த வசதியில்லாத பிக் பாஸ் வீட்டில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் வசதியுள்ள வீட்டுக்குள் செல்ல அவர்கள் சில டாஸ்குகளை செய்யவேண்டும் என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.
ஏற்கனவே இந்த இரண்டு வீடு கான்செப்ட் என்பது மற்ற மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் தொடங்கப்பட்டுவிட்டது என்றும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசன் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களுக்கு சரியான போட்டி காத்திருக்கிறது. வழக்கத்திற்கு மாறான ஒரு நிகழ்ச்சியாக ஸ்வாரஸ்யத்துடன் இந்த சீசன் இருக்க போகிறது என்பதால் இந்த சீசனின் தொடக்கத்திற்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் சின்னத்திரை ரசிகர்கள்.
இந்த பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் மாதம் துவங்குவதால் இந்த ஆண்டும் போட்டியாளர்களுக்கு தீபாவளி, நியூ இயர், பொங்கல் அனைத்துமே பிக்பாஸ் வீட்டுக்குள் சக போட்டியாளர்களுடன் தான் என்பதால் ஒரே கொண்டாட்டமாக இருக்கப்போகிறது.