மேலும் அறிய

Super Singer: திறமையாளர்களுக்கு தொடர்ந்து ஏற்றம் தரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.. பாராட்டும் ரசிகர்கள்..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. இந்த பிரிவுகளிலிருந்தும் பல திறமையான பாடகர்கள் திரைத்துறையில் பிரபல பாடகர்களால் பல பாடல்கள் பாடி வருகின்றனர்.

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில்,  ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள்,  கலந்துகொள்ளும்  இந்த  சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வருகிறது.  இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி  வருகின்றனர். 

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக கலந்துகொள்ளும், இசையமைப்பாளர்கள் பலருக்குப் பாட்டு வாய்ப்பளித்துள்ளனர்.  மாற்றுத்திறனாளிகள் ஏழ்மை நிலையில் இருக்கும் திறமையாளர்கள் பலர் இந்நிகழ்ச்சி மூலம் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். நெகிழ்ச்சியான பற்பல அற்புத தருணங்கள் இந்நிகழ்ச்சியில் அரங்கேறியுள்ளது. 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர்,  ஜூனியர்  எனப் பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. இந்த பிரிவுகளிலிருந்தும் பல திறமையான பாடகர்கள் திரைத்துறையில் பிரபல பாடகர்களால் பல பாடல்கள் பாடி வருகின்றனர்.விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், 30 க்குமேற்பட்ட பாடகர்கள் 13க்கும் மேற்பட்ட  முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில், 250க்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளனர்.

இசைத்துறைக்கு மிகப்பெரும் பங்களிப்பதோடு,  பல திறமையாளர்களுக்கு ஏற்றம் தரும் நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உள்ளது. ஜூனியரில் பூவையார், நித்யஶ்ரீ, ஹரிப்பிரியா, பிரியங்கா, பிரகதி குரு பிரசாத் என பல திறமையாளர்கள் திரைத்துறையில் முன்னணி பாடகர்களாக வலம் வருகின்றனர். 

சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பாடகர்கள்  பூஜா வைத்தியநாத், சத்திய பிரகாஷ், திவாகர், செந்தில் கணேஷ், ரக்‌ஷிதா சுரேஷ், பூவையார், ஷாம் விஷால், சிவாங்கி, யோகி சேகர், ஆதித்யா RK  தென்னிந்தியத் திரைத்துறையில் மிகச்சிறந்த  முன்னணி பாடகர்களாகக் கோலோச்சி வருகின்றனர். மேலும் இசையமைப்பாளர் நடத்தும் வேர்ஃல்ட் டூர், வெளிநாட்டு இசை கச்சேரி, உள்நாட்டு இசைக்கச்சேரி என, பல இசை நிகழ்ச்சிகளிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர்களே பங்கு பெற்று வருகிறார்கள். 

திறமையாளர்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதுடன், அவர்களுக்கு வப்புகளைக் குவித்துத் தரும்,  புகலிடமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்குகிறது. தற்போது சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 9 நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியிலும் பல நெகிழ்வான தருணங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த வாரம் நிகழ்ந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சிறுவன் கலர்வெடி கோகுல், தனது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலை,  கொண்டாட்டத்துடன் பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார். 

எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடும்ப பாரத்தை தன்மேல் சுமந்துகொண்டு, கானாவில் எதிர்காலத்தைக் கனவு காணும் கலர்வெடி கோகுலுக்கு, அவரின் வாழ்க்கையை மாற்றும் பெரும் ஆசீர்வாதத்தைத் தந்தார் இசையமைப்பாளர் தமன். இந்நிகழ்ச்சியின் போது, வரும் தீபாவளிக்குள், ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில், அவர் அண்ணண் பாடல் எழுதவும், கலர்வெடி கோகுல் பாடவும் வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார் இசையமைப்பாளர் தமன். ஒரு போட்டி நிழச்சியாக மட்டுமல்லாமல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, திறமையால் ஒளிரும் பலருக்கு மாற்றம் தந்து வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Embed widget