Entertainment Headlines: தலைவர் 171 பற்றி ரஜினியின் ரியாக்ஷன்.. சூர்யா 43 அப்டேட்.. இன்றைய சினிமா செய்திகள்!
Entertainment Headlines Oct 14: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
வாவ்.. ஆயுத எழுத்து, சில்லுனு ஒரு காதல் வரிசையில் மீண்டும் காலேஜ் பையன் ரோல்.. சூர்யா 43 அப்டேட்!
தேசிய விருது வென்ற சுதா கொங்காரா - சூர்யா கூட்டணி இரண்டாவது முறையாக இணையும் திரைப்படம் சூர்யா 43. சூரரைப் போற்று படத்தின் வெற்றியால் கோலிவுட்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் கூட்டணியாக இந்தக் கூட்டணி உருவாகி இருக்கிறது. தற்போது சூர்யா 43 படத்திற்காக லொக்கேஷன், நடிகர்கள் முடிவு செய்யப்பட்டு படப்பிடிப்புக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்தப் படத்தின் சூர்யாவின் கதாபாத்திரம் எப்படியானதாக இருக்கும் என்கிற தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் படிக்க
ஜிவிஎம் சினிமேட்டிக் யுனிவர்ஸ்.. ஜெயிலர் வில்லன்.. துருவ நட்சத்திரம்ல இதெல்லாம் ஸ்பெஷல்!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். முதலில் சூர்யா நடிக்க இருந்த நிலையில், அவர் விலகிய பின் விக்ரம் இப்படத்தில் நடிக்க முடிவானது. மேலும் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரித்விராஜ் சுகுமாறன், திவ்யதர்ஷினி, பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் படிக்க
கலக்கிட்ட கண்ணா.. தலைவர் 171 கதை கேட்டு ரஜினி ரியாக்ஷன்.. லோகேஷ் சொன்ன சீக்ரெட்!
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் படம் தலைவர் 171. ரஜினிகாந்த இந்தப் படத்தில் நடிக்க, சன் பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ படம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில், லோக்கியின் அடுத்த படமான தலைவர் 171 குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் படிக்க
பான் இந்தியா ரசிகர்கள் தான் குறி.. தமிழ் தாண்டி மேலும் 4 மொழிகளில் வெளியான ‘நான் ரெடி’ பாடல்!
இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று லியோ திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன் , சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
லியோ திரைப்படத்தின் முதல் பாடலான நான் ரெடி பாடல் கடந்த ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. மேலும் படிக்க
பிக்பாஸ் ஹிட்டா இல்ல ஃபிளாப்பா... ரேட்டிங் சொல்லும் ரிசல்ட் என்ன? தெறிக்கவிடும் 7வது சீசன்...
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு அதிலும் ரியாலிட்டி ஷோக்கள் வயது வரம்பின்றி அனைத்து வயது ரசிகர்ளையும் எளிதில் கவர்ந்து விடும். சீரியல்கள் எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நீங்காத ஒரு இடத்தை பிடிக்குமோ அதே போல கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி நண்டு சிண்டு முதல் வீட்டில் இருக்கும் வயதான தாத்தா பாட்டி வரை அனைவரையும் உன்னிப்பாக கவனிக்க வைத்தது. மேலும் படிக்க