TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
தவெக தலைவரும், நடிகருமான விஜய் மலேசியாவில் இருந்து சென்னை திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் தடுமாறி கீழே விழுந்தார்.

தவெக தலைவரும், நடிகருமான விஜய் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நேற்று நடைபெற்றது. மலேசியாவில் நடந்த இந்த இசை வெளியீட்டு விழா முடிந்ததைத் தொடர்ந்து இன்று மலேசியாவில் இருந்து தனி விமானம் மூலமாக விஜய் சென்னை வந்தடைந்தார்.
கீழே விழுந்த விஜய்:
சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் உற்சாகமாக வரவேற்றனர். இதனால், விமான நிலையத்தின் வாசலில் கூட்டம் முண்டியடித்தது. கூட்டத்தின் நடுவே ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் கை காட்டிக் கொண்டு வந்த விஜய், திடீரென அதிகரித்த கூட்டத்தால் திடீரென நிலை தடுமாறி காரின் முன்பு கீழே விழுந்தார்.
இதனால், விஜய்யின் பாதுகாவலர்களும், ரசிகர்களும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சுதாரித்துக் கொண்டு எழுந்த விஜய் காரில் ஏறினார். இதனால், அவரது ரசிகர்கள், தொண்டர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர்.
மலேசியாவில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பு தனது கடைசி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஜய்யுடன் படத்தின் இயக்குனர் எச்.வினோத், நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
தனது ரசிகர்கள் முன்பு உருக்கமாக பேசிய விஜய் இன்று திரும்பினார். விஜய் வருவதால் அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கில் ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்தனர். ரசிகர்களும், தொண்டர்களும் முண்டியடித்ததன் காரணமாகவே விஜய் கீழே விழும் சூழல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல்:
விஜய்யை வரவேற்பதற்காக அதிகளவு ரசிகர்களும், தொண்டர்களும் விமான நிலையத்தில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மலேசியாவில் இருந்து இசை வெளியீட்டு விழாவை முடித்துக் கொண்டு உடனடியாக சென்னை திரும்பிய விஜய், இனி அரசியல் பணிகளில் தீவிர கவனம் செலுத்த உள்ளார்.
வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பு, கூட்டணி பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த உள்ளார்.
Before You Go
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
ட்ரெண்டிங் செய்திகள்






















