BiggBoss 7 Rating : பிக்பாஸ் ஹிட்டா இல்ல ஃபிளாப்பா... ரேட்டிங் சொல்லும் ரிசல்ட் என்ன? தெறிக்கவிடும் 7வது சீசன்...
Bigg boss 7 TVR Rating : பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் லான்ச் எபிசோட் டி.வி.ஆர் ரேட்டிங் படி 9.9 புள்ளிகள் பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு அதிலும் ரியாலிட்டி ஷோக்கள் வயது வரம்பின்றி அனைத்து வயது ரசிகர்ளையும் எளிதில் கவர்ந்து விடும். சீரியல்கள் எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நீங்காத ஒரு இடத்தை பிடிக்குமோ அதே போல கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி நண்டு சிண்டு முதல் வீட்டில் இருக்கும் வயதான தாத்தா பாட்டி வரை அனைவரையும் உன்னிப்பாக கவனிக்க வைத்தது.
மேடையில் நிகழும் மேஜிக் :
இந்த நிகழ்ச்சி கூடுதலாக ரசிகர்களை ஈர்ப்பதற்கு மிக முக்கியமான காரணம் உலகநாயகன் கமல்ஹாசன். கடந்த ஆறு சீசன்களாக மேடையில் மேஜிக் செய்த கமல்ஹாசன் இந்த பிக் பாஸ் 7வது சீசனையும் தொகுத்து வழங்குகிறார் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
கடந்த அக்டோபர் 1 ம் தேதி முதல் துவங்கிய பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் வஞ்சனை இல்லாமல் சண்டையும் சச்சரவுமாக சிறப்பாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும் சனி ஞாயிறுகளில் 9.30 மணி முதல் 11 மணி வரையிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
18 போட்டியாளர்கள் :
இந்த பிக் பாஸ் 7 சீசனில் மாயா கிருஷ்ணா, அக்ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை, வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன், நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விஜய்- வர்மா உள்ளிட்ட 18 பேர் முதல் நாளில் என்ட்ரி கொடுத்தனர்.
இப்படி நாளுக்கு நாள் பரபரப்பின் உச்சத்தில் ட்ரெண்டிங் லிஸ்டிங் நம்பர் ஒன் இடத்தை கைப்பற்றி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங் வெளியாகியுள்ளது. கிடைத்துள்ள தகவலின்படி பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் லான்ச் எபிசோட் டி.வி.ஆர் ரேட்டிங் படி 9.9 புள்ளிகள் பெற்றுள்ளது. லான்ச் எபிசோடின் ரேட்டிங்கே 9.9 புள்ளிகள் என்றால் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் முதல் வார ரேட்டிங் எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள். விரைவில் அதுவும் வெளியாகி கெத்து காண்பிக்க போகிறது என ஆர்ப்பரிக்கிறார்கள் பிக்பாஸ் டை ஹார்ட் பேன்ஸ்.
இந்த ரேட்டிங் சொல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த வெற்றி வரலாறு...