மேலும் அறிய

Thalaivar 171: கலக்கிட்ட கண்ணா.. தலைவர் 171 கதை கேட்டு ரஜினி ரியாக்‌ஷன்.. லோகேஷ் சொன்ன சீக்ரெட்!

லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை இயக்கும் 'தலைவர் 171' படத்தின் கதையை கேட்டு ரஜினிகாந்தின் ரியாக்‌ஷன் என்னத் தெரியுமா?

தலைவர் 171

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் படம் தலைவர் 171. ரஜினிகாந்த இந்தப் படத்தில் நடிக்க, சன் பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ படம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில், லோக்கியின் அடுத்த படமான தலைவர் 171 குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பான குட்டி குட்டித் தகவல்களை கொடுத்து வருகிறார் லோகேஷ்.

ஐமேக்ஸ் கேமராவில் படப்பிடிப்பு

தனது ஒவ்வொரு படத்துக்கும் ஏதாவது புதிதாக முயற்சிகளை செய்யும் லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 படத்தின் சில பகுதிகளை ஐமேக்ஸ் கேமராவில் படம்பிடிக்க இருப்பதாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். இந்தப் படத்தின் கதையை மாநகரம் படத்தின் ரிலீஸூக்காக காத்திருந்த காலத்தில் தான் எழுதியதாகவும், அப்போது தன்னுடைய நண்பர் இந்தப் படத்தில் நடிக்க இருந்ததாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினிகாந்த் நடித்த படங்களில் தனக்கு தளபதி படம் மிகவும் பிடித்த படம் என்றும், தளபதி படத்தை தான் எண்ணற்ற முறை பார்த்திருப்பதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

கதை கேட்டு ரஜினியின் ரியாக்‌ஷன்

தலைவர் 171 படம் குறித்து இன்னும் விரிவாகப் பேசிய லோகேஷ் கனகராஜ் இப்படி கூறியுள்ளார் “ எல்.சி.யூவை விட்டு வெளியே வந்து என்னுடைய ஸ்டைலில் ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருந்தது. தலைவர் 171இன் கதை மிகக் கச்சிதமாக ரஜினிகாந்துக்கு பொருந்தி இருக்கிறது.

இந்தப் படத்தை இயக்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். அதே நேரத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் இந்தப் படத்தில் நடிப்பதற்கு மிக உற்சாகமாக காத்திருக்கிறார். நான் அவரிடம் கதை சொல்லி முடித்ததும் அவர் எழுந்து வந்து என்னை கட்டிபிடித்துக் கொண்டார். வழக்கம் போல் அவரது ஸ்டைலில் ‘கலக்கிட்ட கண்ணா’ என்று பாராட்டினார். அவரது கண்களில் இருந்த சந்தோஷத்தை என்னால் பார்க்க முடிந்தது” என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

இன்னும் பல சர்ப்ரைஸ்!

இந்தப் படத்தின் வேலைகள் தொடங்கியதும் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என லோகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் நடிகர்கள் பற்றி நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். தலைவர் 171 படத்துக்காக முதன்முறையாக மலையாளத் திரையுலகின் திரைக்கதை எழுத்தாளர்களுடன் சேர்ந்து பணியாற்ற இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

அடுத்த ஆண்டு மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

லியோ

விஜய் , த்ரிஷா, பிரியா ஆனந்த், கெளதம் மேனன், மிஸ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடித்து உருவாகி இருக்கும் லியோ திரைப்படம், வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
MG Hector Hawk: மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Embed widget