Entertainment Headlines: தங்கலான் விக்ரமின் பாத்திரம் .. இளையராஜா பற்றி மிஷ்கின்.. தபு பிறந்த நாள்.. சினிமா செய்திகள் இன்று!
Entertainment Headlines Nov 04: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
Thangalaan: என்னது விக்ரமுக்கு தங்கலான் படத்தில் வசனமே இல்லையா.. படக்குழு தந்த பதில்!
தமிழ் சினிமாவின் அடையாளங்களாகக் கருதப்படும் இயக்குநர்களில் ஒருவர் பா. ரஞ்சித். தனது ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக சமூகத்துக்கு ஏதாவது ஒரு மெசேஜ் கொடுக்க வேண்டும் என துணிச்சலாக திரைக்கதையை அமைத்து அதில் வெற்றியும் காண்பவர் இயக்குநர் பா. ரஞ்சித். மேலும் படிக்க
Devil Audio Launch: நான் போய்சேரும் இடம் இளையராஜாவின் காலடிதான்.. இயக்குநர் மிஷ்கின் உருக்கம்!
யக்குநர் மிஷ்கின் தான் படத்திற்காக இசையமைத்த பாடல்களை மேடையில் இசைக்கலைஞர்களுடன் நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவை தன்னுடைய இரண்டாவது குரு எனக் கூறிய மிஷ்கின் இளையராஜாவை நினைத்து மேடையில் மண்டியிட்டார். “என்னுடைய சிறு வயதில் என்னுடைய தந்தை என்னை ஒரு பொருள்காட்சிக்கு கூட்டிப் போனார். என்னுடைய தந்தையின் தலையில் அமர்ந்திருந்த நான் இளையராஜாவின் அன்னக்கிளி பாடலைக் கேட்டு என் அப்பாவின் தலை முடியை பிடித்து அவரை நிறுத்தினேன். மேலும் படிக்க
Bigg Boss 7 tamil: கூல் சுரேஷ் Vs பிரதீப்.. உரிமை Vs நம்பிக்கை துரோகம்.. யார் சரி? வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் சண்டையாகி உச்சகட்டத்தை எட்டியது. சில்லறை பையன், துரோகம் பண்ணிட்ட, செருப்பால அடிப்பேன், அசிங்கப்பட்டு போயிருவ, அம்மா மேல பொய் சத்தியம் பண்ற நீ எல்லாம் எப்படிப்பட்ட ஆளு என கூல் சுரேஷை வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசி பிக்பாஸ் வீட்டையே கலவரமாக்கினார். மேலும் படிக்க
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகும் மாநகரம் ரீமேக் படமான ’மும்பைக்கர்’
சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள மும்பைக்கர் படத்தில் விஜய் சேதுபதி, விக்ராந்த் மாசே, ஹிருது ஹாரூண், ரன்வீர் ஷோரே, தன்யா மானிக்தலா, சஞ்சய் மிஸ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மும்பையின் பரபரப்பான தெருக்களுடன் தொடர்புடைய கதாபாத்திரங்களில் வாழ்க்கையை கூறும் இந்த படம், லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தின் ரீமேக் படமாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
Tabu: அன்பே.. அப்பாஸ் முதல் அஜித் வரை காதலால் உருகவைத்த தனித்துவ நாயகி.. தபுவின் பிறந்தநாள்!
பாலிவுட்டின் பிரபல நடிகையான ஷப்னம் ஆஸ்மி - பிரபல கவிஞர் ஜாவேத் அக்தர் தம்பதியின் உறவுக்காரரான தபு, தன் 11ஆம் வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து 1994ஆம் ஆண்டு ரிஷி கபூருக்கு ஜோடியாக ‘பெஹலா பெஹலா ப்யார்’ எனும் படத்தில் நடிகையாக அறிமுகமானார். ஹீரோயினாக அவரது முதல் படம் பெரிய கவனமீர்க்கவில்லை தான். ஆனால் முதல் 2 ஆண்டுகளில் பாலிவுட்டின் பிரபல நடிகையாக உருவெடுத்த தபு 1996ஆம் ஆண்டு தென்னிந்திய ரசிகர்களின் இதயங்களுக்குள் நுழைந்தார். மேலும் படிக்க